JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்வது எப்படி?

0
JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு - தெரிந்து கொள்வது எப்படி?
JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு - தெரிந்து கொள்வது எப்படி?
JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்வது எப்படி?

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் JEE Advanced தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் அதற்கான இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

JEE (Joint Entrance Examination) என்று சொல்லக் கூடிய கூட்டு நுழைவுத் தேர்வு மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு ஆகும். இத்தகைய தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அவை JEE மற்றும் JEE Advanced தேர்வுகள் ஆகும். இத்தகைய தேர்வானது என்ஐடி, ஐஐடி மற்றும் ஐஐஐடி போன்ற மத்திய தொழிற்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ மற்றும் பி.டெக் போன்ற தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாகும். இத்தகைய நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது பெரும்பாலான மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. இதில் என்ஐடி, ஐஐடி போன்ற படிப்புகளில் சேர்வதற்கு JEE மட்டும் போதுமானதாகும்.

தமிழகத்தில் காலை 8 மணி முதல் ரேஷன் கடைகள் திறப்பு – மூன்று நாட்கள் மட்டும்! தீபாவளி எதிரொலி!

ஆனால் ஐஐடியில் சேருவதற்கு JEE மற்றும் JEE Advanced என இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பது தான் இத்தேர்வின் நோக்கமாக கருதப்படுகிறது. இத்தகைய JEE Advanced தேர்வானது ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி கரக்பூர், ஐஐடி சென்னை, ஐஐடி ரூர்க்கி ஆகியவை கூட்டாக சேர்ந்து நடத்துகிறது. மேலும் JEE Main தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் இடத்துக்குள் உள்ளவர்கள் மட்டுமே JEE Advanced தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இத்தகைய தேர்வானது அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். மேலும் இதில் நெகட்டிவ் மார்க் உள்ளது. அதனால் பதில் சரியாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதவேண்டும்.

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பருவத்தேர்வு பாடத்திட்டம்!

இந்த ஆண்டு JEE Advanced தேர்வானது அக்.03ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) காரக்பூர் அத்தேர்வுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு எண், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  jeeadv.ac.in என்ற இணைய தளத்திற்கு JEE மேம்பட்ட 2021 லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து கிளிக் செய்தால் மதிப்பெண் பக்கம் தோன்றும். அதனை பதிவேற்றம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!