ஜாக்டோ-ஜியோ கோரிக்கை நிறைவேற்றம்.. போராட்டம் வாபஸ் – அதிருப்தியில் ஆசிரியர்கள்!

0
ஜாக்டோ-ஜியோ கோரிக்கை நிறைவேற்றம்.. போராட்டம் வாபஸ் - அதிருப்தியில் ஆசிரியர்கள்!

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என அளித்த வாக்குறுதியை நம்பி போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.

அதிருப்தியில் ஆசிரியர்கள்:

ஜாக்டோ ஜியோ அமைப்பின் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது, அரசின் காலியிடங்களை விரைவில் நிரப்புவது போன்ற 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஜனவரி மாதம் முதல் ஈடுபட்டனர். இருப்பினும் இதற்கான தீர்வுகள் கிடைக்காத நிலையில் இன்று (பிப். 15) தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய போவதாக இவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 13ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

NCRTC ஆணையத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்:ரூ.55,678/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இதன் முடிவில் அரசின் நிதி நிலைமை சீரானவுடன் கோரிக்கைகள் அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றப்படும் என அரசு சார்பாக உறுதியளிக்கப்பட்டது. எனவே ஜாக்டோ ஜியோ அமைப்பானது தனது போராட்டத்தை வாபஸ் செய்வதாக கூறியது. இது முன்கள போராட்டகாரர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் ஒருவர் தற்போது வெளியிட்ட குற்றச்சாட்டு பதிவு சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதில் அவர் பழைய பென்ஷன் வழங்குதல், இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாடு போன்ற முக்கிய கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு அளிக்காத போது ஜாக்டோ ஜியோ அமைப்பு 02வது முறையாக போராட்டத்தை வாபஸ் வாங்குவது ஏமாற்றத்தை அளிக்கிறது. உங்களால் முடிந்தால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயலுங்கள், இல்லையேல் எங்களை போன்றவர்களை ஆட்சியரிடம் அடகு வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!