Police ஆகுறது உங்களோட கனவா? இதோ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!

0
Police ஆகுறது உங்களோட கனவா? இதோ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!
Police ஆகுறது உங்களோட கனவா? இதோ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!
Police ஆகுறது உங்களோட கனவா? இதோ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3552 காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்த காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாகவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா இலவச பயிற்சி

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக தான் நிரப்படுகின்றன. அந்த வகையில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த காலிப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் போன்றவற்றின் அடிப்படையில் நிரப்பப் பட இருக்கின்றனர். மேலும் இந்த பணியிடங்களில் சேர விருப்பமுள்ள பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்விற்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பயிற்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!

Exams Daily Mobile App Download

இது குறித்து தலைமைச் செயலாளர்/ பயிற்சித்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காவலர் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். அது போல இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள்  கூடுதல் விவரங்கள் மற்றும்  விண்ணப்ப படிவத்தை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் 14-09-2022 வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 24621475 மற்றும் 044 24621909 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!