நாளை (ஆகஸ்ட் 1) முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!

0
நாளை (ஆகஸ்ட் 1) முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!
நாளை (ஆகஸ்ட் 1) முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!
நாளை (ஆகஸ்ட் 1) முதல் பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!

ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அட்டவணையை கல்வித்துறை முன்னதாக வெளியிட்டிருந்தது. ஆனால், இடையில் கோடை விடுமுறை நீடிக்கப்பட உள்ளதாக பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

பிப்ரவரி 22, 2022 அன்று நடைபெற்ற கல்வி குறித்த வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சிந்து அரசின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் 01-06-2022 முதல் 07-07-2022 வரை கோடை விடுமுறைக்காக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு நிலையால் கடந்த 2 வருடங்களாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

கடந்த கல்வியாண்டிலும் தொற்று நோயின் பரவல் காரணமாக பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படவில்லை. இதனால் மிகவும் தாமகதமாக தான் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. ஜூன் 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 சிந்துவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்ற நிலையில், கனமழை மற்றும் அஷுரா போன்ற காரணங்களால் விடுமுறை நீடிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது.

தமிழக பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – மாநகராட்சி அறிவிப்பு

குறிப்பாக, சில தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையை நீட்டித்ததை அடுத்து, கோடை விடுமுறையை அதிகரிக்க மாகாண அரசு ஆலோசிப்பதாக மாணவர்கள் மத்தியில் வதந்தி பரவ தொடங்கியது. ஆனால் , கல்வித் துறையின் செய்தி தொடர்பாளர், கோடை விடுமுறைகள் அதிகாரப்பூர்வமாக ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய உள்ளதால், சிந்துவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை மாகாண கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இன்று உறுதி செய்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 1ம் தேதியான நாளை முதல் சிந்துவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!