ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – இனி புதிய விதிமுறைகள்! IRCTC அறிவிப்பு!

0
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - இனி புதிய விதிமுறைகள்! IRCTC அறிவிப்பு!
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு - இனி புதிய விதிமுறைகள்! IRCTC அறிவிப்பு!
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – இனி புதிய விதிமுறைகள்! IRCTC அறிவிப்பு!

நாடு முழுவதும் மக்கள் பலர் ரயில் சேவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய விதிகளை தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்

புதிய விதிகள்:

இந்திய மக்கள் பலர் பொது போக்குவரத்திற்கு அதிகமாக ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். தொலைதூர பயணங்களுக்கு பலர் ரயில்களை விரும்புகின்றனர். மேலும் ரயில்களில் கூட்டமாக பயணம் செய்யும் போது இரவு நேரங்களில் பேசிக் கொண்டே செல்வதால் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக இரவு நேரங்களில் ரயிலில் பயணம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் IRCTCன் போர்டு TTE, கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பொது மக்களுக்கு இது குறித்து அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் புகைபிடிப்பது, மது அருந்துதல் உள்ளிட்ட செயலை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பணிகள் தீவிரம்.. தேர்வு துறையின் முக்கிய உத்தரவு!

புதிய விதிகள்:
  • ரயிலில் பயணம் செய்யும் போது இரவு நேரத்தில் மொபைலில் பேச கூடாது.
  • மேலும் இயர்போன் இல்லாமல் பயணிகள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்க கூடாது.
  • இரவு 10 மணிக்கு பின் பயணிகள் இரவு விளக்கு தவிர மற்ற விளக்குகளை எரிய வைக்க கூடாது.
  • மேலும் 10 மணிக்கு பின் டிக்கெட் பரிசோதனை செய்ய TTE வர முடியாது.
  • இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் குழுவாக இருந்து அரட்டை அடிக்க கூடாது.
  • மிடில் பெர்த் பயணிகள் தங்கள் இருக்கையைத் திறந்து வைத்தால், கீழே உள்ள சக பயணிகள் எதுவும் சொல்ல முடியாது.
  • ரயில்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் 10 மணிக்கு மேல் உணவு வாங்க முடியாது. இருந்தாலும் இரவு இகேட்டரிங் மூலம் ரயில்களில் உங்களது உணவு அல்லது காலை உணவை முன் கூட்டியே ஆர்டர் செய்ய முடியும்.
  • மேலும் ஏசி பெட்டியில் பயணம் செய்வோர் அதிகபட்சம் 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்து செல்லலாம், அதே போல ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும் மற்றும் இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் பயணிகள் இலவசமாக லக்கேஜ் எடுத்து செல்லலாம், அவ்வாறு கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி 150 கிலோ ஏசி கோச்சிலும், ஸ்லீப்பர் கோச்சில் 80 கிலோ மற்றும் இரண்டாவது உட்கார்ந்து 70 கிலோ பை மற்றும் சாமான்களை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!