மத்திய அரசின் அஞ்சல் துறையில் டிகிரி படித்தவர்க்கு வேலை – 650 காலிப்பணியிடங்கள்..!
இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் (India Post) தற்போது Grameen Dak Sevak பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 650 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | India Post Payments Bank Limited (India Post) |
பணியின் பெயர் | Gramin Dak Sevaks (GDS) |
பணியிடங்கள் | 650 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
India Post காலிப்பணியிடம்:
தற்போது வெளியான மத்திய அரசின் இந்திய அஞ்சல் கட்டண வங்கி லிமிடெட் துறையில் Grameen Dak Sevak பணிக்கு என்று மொத்தமாக இந்திய முழுவதும் 650 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 45 பணியிடங்கள் நிரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
Gramin Dak Sevaks (GDS) கல்வி தகுதி:
பணிக்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள்.
India Post வயது விவரங்கள்:
பணிக்கு 30.04.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 20 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
Gramin Dak Sevaks (GDS) அனுபவ விவரங்கள்:
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் குறைந்தது 2 ஆண்டுகள் Grameen Dak Sevak பணி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
India Post ஊதிய விவரம்:
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டு ரூ.30,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
Gramin Dak Sevaks (GDS) தேர்வு முறை:
பணிக்கு தேவையான திறமை வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் எழுத்து தேர்வானது நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. (உத்தேசமாக ஜூன் 2022 நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.)
India Post விண்ணப்பக் கட்டணம்:
பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.700/- வசூலிக்கப்பட்ட உள்ளது. இது குறித்த முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
Gramin Dak Sevaks (GDS) விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசின் அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற நபர்கள் உடனே விரைந்து இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.