IPL சீசன் – 16 .. சென்னை Vs குஜராத் அணிகள் மோதல் – துவங்கியது டிக்கெட் விற்பனை!
IPL 16 – வது சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை – குஜராத் அணிகள் மோதும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் போட்டிக்கான டிக்கெட் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
IPL சீசன் -16 :
IPL 16 – வது சீசன் கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்தமாக 10 அணிகள் IPL போட்டியில் பங்கேற்கவுள்ளனர். அதன்படி முதல் கட்டமாக IPL போட்டி மார்ச் 31ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் – இருவர் பலி! ஷாக் ரிப்போர்ட்!
இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் மோதவுள்ளனர். தற்போது இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ரசிகர்கள் போட்டியை கண்டுகளிப்பதற்கான டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக எளிதாக பெறலாம். டிக்கெட்டின் விலையானது குறைந்தபட்சமாக ரூ. 800 முதல் அதிகபட்சமாக ரூ. 4,500 வரை விற்பனையாகி வருகிறது. ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆன்லைன் வாயிலாக டிக்கெட்டை பெற்று வருகின்றனர். இந்த டிக்கெட்டை Paytm வாயிலாக பெறும் போது சிறந்த ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.