IPL திருவிழா 2021: முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!

0
IPL திருவிழா 2021 முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!
IPL திருவிழா 2021 முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!

IPL திருவிழா 2021: முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!

IPL திருவிழா இன்னும் இரண்டு நாட்களில் (செப்.19) துவங்க உள்ள நிலையில் அதன் வலுவான அணியில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணி பற்றிய ஐபிஎல் வரலாற்றை இங்கே காணலாம்.

பஞ்சாப் கிங்ஸ்:

IPL ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே வலுவான அணியாக திகழ்வது பஞ்சாப் அணி. முன்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்றிருந்த பெயரை தற்போது பஞ்சாப் கிங்ஸ் என மாற்றம் செய்து களம் காணுகிறது. பெயரில் மற்றுமில்லாது அணியிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதுவரை 2014ம் ஆண்டில் மட்டுமே பைனலுக்கு சென்றுள்ளது.

IPL திருவிழா 2021 : டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்!

பலமான பேட்டிங் வரிசையுடனே எப்போதும் பஞ்சாப் அணி களம் காணும். தொடக்கம் முதல் இறுதி வரை அடித்தளம் அமைக்கும் பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டி இருப்பர். அணியின் பேட்டிங் முதுகெலும்பு அதன் கேப்டன் கேஎல் ராகுல் தான். எந்த ஒரு போட்டியிலும் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுப்பதில் வல்லவராக திகழ்கிறார். “யுனிவெர்சல் பாஸ்” என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் கிறிஸ் கெயில் இந்த அணியில் தான் அங்கம் வகித்துள்ளார். அவரது மட்டை சுழல ஆரம்பித்தால் எதிரணி பந்துவீச்சாளர்கள் பாட்டு திண்டாட்டம் தான்.

இவர்கள் மட்டுமில்லாது, மயங்க அகர்வால், பூரன், தீபக் ஹூடா, சர்பராஸ் கான், ஹென்ரிக்ஸ் மற்றும் தமிழக வீரர் ஷாருக் கான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் அங்கம் வகித்துள்ளனர். மேலும் பந்து வீச்சில் முஹம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங், முருகன் அஷ்வின், கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய் போன்றோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர். அவர்களோடு அதிரடிக்கு பெயர் பெற்ற விண்டீஸ் வீரர்களில் ஒருவரான ஃபேபியன் ஆலன் அணியோடு இணைந்துள்ளார்.

ICC T20 தரவரிசை பட்டியல்: விராட் கோஹ்லி, கேஎல் ராகுல் மாற்றமில்லை! ரசிகர்கள் ஷாக்!

துவக்கத்தில் சொதப்பிடும் பஞ்சாப் அணி கடைசி கட்டத்தில் எழுச்சி பெறுகிறது. ஆனாலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை அடைய முடியாமல் தவித்து வருகிறது. அவ்வணியை கேஎல் ராகுல் வழிநடத்துகிறார். இந்த முறையாவது கோப்பை வென்று தருவார் என அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் 5 அவற்றில் வெற்றி பெற்றாக கட்டாயத்துடன் களம் காண உள்ளது. இரண்டாம் கட்டத்தில் செப் 21 அன்று ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

இதுவரை கடந்து வந்த பாதை:
  • 2008 – பிளே-ஆப் சுற்று
  • 2009 – லீக் சுற்று
  • 2010 – லீக் சுற்று
  • 2011 – லீக் சுற்று
  • 2012 – லீக் சுற்று
  • 2013 – லீக் சுற்று
  • 2014 – ரன்னர்
  • 2015 – லீக் சுற்று
  • 2016 – லீக் சுற்று
  • 2017 – லீக் சுற்று
  • 2018 – லீக் சுற்று
  • 2019 – லீக் சுற்று
  • 2020 – லீக் சுற்று
  • 2021 – ??
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!