ICC T20 தரவரிசை பட்டியல்: விராட் கோஹ்லி, கேஎல் ராகுல் மாற்றமில்லை! ரசிகர்கள் ஷாக்!

0
ICC T20 தரவரிசை பட்டியல் விராட் கோஹ்லி, கேஎல் ராகுல் மாற்றமில்லை! ரசிகர்கள் ஷாக்!
ICC T20 தரவரிசை பட்டியல் விராட் கோஹ்லி, கேஎல் ராகுல் மாற்றமில்லை! ரசிகர்கள் ஷாக்!

ICC T20 தரவரிசை பட்டியல்: விராட் கோஹ்லி, கேஎல் ராகுல் மாற்றமில்லை! ரசிகர்கள் ஷாக்!

ICC T20 தரவரிசை பட்டியல் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்திய அணி வீரர்கள் மாற்றமின்றி இருப்பதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

ICC T20 தரவரிசை பட்டியல்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கவுன்சில் ஆனது அவ்வப்போது நடைபெறும் போட்டிகளின் மூலம் வீர்ரகளின் நிலையை குறிப்பிட்டு தரவரிசை பட்டியலினை வெளியிட்டு வருகிறது. தற்போது T20 தரவரிசை பட்டியலினை வெளியிட்டு உள்ளது.

IPL Countdown 2021: கோட்டையில் கொடியேற்றுமா டெல்லி கேப்பிடல்ஸ்? ரிஷாப் பண்டின் படைபலம்!!

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 7 இடங்களில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் மாற்றமின்றி தொடருகின்றனர். முதல் இடத்தில டேவிட் மாலன், இரண்டாம் இடத்தில பாபர் ஆசம் ஆகியயோர் உள்ளனர். இந்தியா சார்பில் விராட் கோஹ்லி 4வது இடத்திலும், கேஎல் ராகுல் 6வது இடத்திலும் உள்ளனர். சமீபகாலமாக T20 போட்டிகள் நடத்தப்படவில்லை என்பதனால் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய பவுலர்கள் ஒருவரும் இல்லாதது ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. முதல் இடத்தில தென்னாபிரிக்க பவுலர் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே ஹசரங்கா மற்றும் ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். இந்திய சார்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 12வது இடத்தில் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் 18வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு இறங்கியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் மட்டும் 25 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

IPL 2021: 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையும் மாற்றமின்றியே தொடருகிறது. இந்திய வீரர்களில் ஹர்டிக் பாண்டியா 20வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி கடைசியாக இலங்கையுடன் T20 போட்டி தொடரில் பங்கேற்றது. அதன் பிறகு, டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருவதனால் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படவில்லை.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!