IPL Countdown 2021 : முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?!

0
IPL Countdown 2021 முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
IPL Countdown 2021 முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

IPL Countdown 2021 : முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?!

ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை பற்றிய ஒரு அலசலை இங்கு காணலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஐபிஎல் போட்டிகளில் அதிக பலம் கொண்ட அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவதால் புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இது வரை கோப்பை வெல்லாத அணிகளில் பெங்களூர் அணியும் ஒன்று என்றாலும், 3 முறை பைனலுக்கு சென்று 3 முறையும் தோல்வியை தழுவிய மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மாற்றம்? BCCI விளக்கம்!

இதுவரை ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அணில் கும்ப்ளே, வெட்டோரி, வாட்சன் என பலர் கேப்டன் ஆக இருந்துள்ளனர். 2011 முதல் தற்போது வரை இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தான் அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால் வெற்றி சதவீதத்தை விட தோல்வி சதவீதமே அதிகமாக உள்ளது. அசுர பேட்டிங் பலம் கொண்டிருந்தாலும் பவுலிங்கில் சொதப்புவதால் அணியின் நிலை மோசமானதாகவே காணப்படுகிறது.

விராட் கோஹ்லி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரில் தற்போது பேட்டிங்கில் அசுர பலம் கொண்டுள்ளது. அதே போல் பவுலிங்கில் ஹர்ஷல் பட்டேல், கிறிஸ்டியன் போன்றோர் கலக்கி வருகின்றனர். ஹர்ஷல் பட்டேலிடம் தான் தற்போது இந்த சீனுக்கான அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆரஞ்சு கேப் உள்ளது. இது வரையிலும் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமை அந்த அணியிடமே உள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!

கடந்த 23.04.2013 அன்று புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 263/5 குவித்து மலைக்க வைத்தது. அதேபோல் ஒரு அணியின் குறைந்த ரன்களிலும் பெங்களூர் தான் முதலிடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் கொல்கத்தாவிற்கு எதிராக 49 ரன்களில் சுருண்டது. இதுவரை 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் பைனலுக்கு சென்றிருந்தாலும் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. கடந்த சீன்களாக சொதப்பி வந்த அவ்வணி கடந்த 2020ம் ஆண்டில் பிளே-ஆப் சுற்று வரை முன்னேறியது.

தற்போதைய ஐபிஎல் போட்டியின் முதல் கட்டத்தில் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் சிறப்பான வெற்றி பெற்று இந்த முறையாவது கோப்பை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு உள்ளனர். அவர்களின் வழக்கமான “ஈ சாலா கப் நமதே” என்ற புகழ் பெற்ற முழக்கமும் ரசிகர்களிடம் இன்னும் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. 10 வருடங்கள் வரை கேப்டன் ஆக இருந்தும் கோப்பை வெல்லாத கேப்டன் என்ற விமர்சனத்திற்கு முற்று புள்ளி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கடந்து வந்த பாதை:

2008 – லீக் சுற்று
2009 – ரன்னர்
2010 – பிளே-ஆப் சுற்று
2011 – ரன்னர்
2012 – லீக் சுற்று
2013 – லீக் சுற்று
2014 – லீக் சுற்று
2015 – பிளே-ஆப் சுற்று
2016 – ரன்னர்
2017 – லீக் சுற்று
2018 – லீக் சுற்று
2019 – லீக் சுற்று
2020 – பிளே-ஆப் சுற்று
2021 – ??

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!