அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!

தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக சாம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷ்யாவின் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு இணையான அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட உலக டென்னிஸ் சாம்பியனான ஜோகோவிச் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவியுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அரிய சாதனையை இழந்துள்ளார் ஜோகோவிச்.

இந்தியாவில் ஒரே நாளில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று – 219 பேர் உயிரிழப்பு!

இந்த ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்யாவின் மெத்வதேவ், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளர். ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சுடன் களம் கண்ட மெட்வதேவ் 6-4,6-4, 6-4 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அதனால் இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சுமார் 52 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோக்கோவிச், ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளார்.

தமிழகத்தில் B.Ed படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு துவக்கம் – கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!

இதற்கு முன்னதாக கடந்த 1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர் ரோட் ரேவர், ஓரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 2021 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 34 வயதான ஜோகோவிச்சை வீழ்த்திய மெத்வதேவ், கடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸின் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச்சுடன் விளையாடி வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!