IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – போட்டி அட்டவணை, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள்!

0
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு - போட்டி அட்டவணை, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள்!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு - போட்டி அட்டவணை, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள்!
IPL 2022 லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – போட்டி அட்டவணை, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி எந்தெந்த நாட்களில் எந்த அணிகளை எதிர்கொள்கிறது, போட்டி நடைபெறும் நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

CSK

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகவும் நிலையான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK). இதுவரை 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த முறை தனது முதல் ஆட்டத்தை மார்ச் 26ம் தேதியன்று வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக துவங்க இருக்கிறது. இப்போது புதிய சீசனில் பல புதிய இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த பழைய வீரர்களுடன் போட்டிகளில் களம் காண இருக்கும் CSK அணி தனது ஐந்தாவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாடும் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் போட்டி அட்டவணை, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

போட்டி அட்டவணை:
  • மார்ச் 26: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 7:30 PM, IST மும்பை வான்கடே மைதானம்.
  • மார்ச் 31: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7:30 PM, IST மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம்.
  • ஏப்ரல் 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – 7:30 PM, IST மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பிற்பகல் 3:30, IST மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
  • ஏப்ரல் 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 7:30 PM, IST டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
  • ஏப்ரல் 17: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மாலை 7:30 PM, IST புனே MCA ஸ்டேடியம்.
  • ஏப்ரல் 21: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7:30 PM, IST டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
  • ஏப்ரல் 25: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7:30 PM, IST மும்பை வான்கடே மைதானம்.
  • மே 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மாலை 7:30, IST புனே MCA ஸ்டேடியம்.
  • மே 4: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மாலை 7:30, IST புனேவில் உள்ள MCA ஸ்டேடியம்.
  • மே 8: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – 7:30 PM, IST டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி.
  • மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – 7:30 PM, IST மும்பை வான்கடே மைதானம்.
  • மே 15: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – பிற்பகல் 3:30, IST மும்பை வான்கடே மைதானம்.
  • மே 20: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 7:30 PM, IST மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம்.
நேரடி ஒளிபரப்பு:

இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இருக்கும். அதனால் அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் ஆகிய சேனல்களில் மேட்ச் ஒளிபரப்பாகும். தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் IPL போட்டிகளை பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:

தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், ஷிவம் துபே, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டெவோன் கான்வே, டுவைன் ப்ரிடோரியஸ், மிட்செல் ஸ்ரில்நேர்னர், மிட்செல் எஸ், சுப்ரான்சு சேனாபதி, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, கே.பகத் வர்மா, சி.ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன், கே.எம். ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!