IPL 2022 MI Vs RR: ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ் & பிளேயிங் லெவன் – ஒரு அலசல்!

0
IPL 2022 MI Vs RR: ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ் & பிளேயிங் லெவன் - ஒரு அலசல்!
IPL 2022 MI Vs RR: ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ் & பிளேயிங் லெவன் - ஒரு அலசல்!
IPL 2022 MI Vs RR: ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ் & பிளேயிங் லெவன் – ஒரு அலசல்!

இன்று நடைபெற இருக்கும் IPL 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்த ஆட்டத்திற்கான ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ், ட்ரீம்11 அணி, பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

MI Vs RR

டாடா ஐபிஎல் 2022 சீஸனின் 9வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று (ஏப்ரல்.2) எதிர்கொள்ள இருக்கிறது. அந்த வகையில் IPL போட்டிகளின் வரலாற்று சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது. அதாவது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

தமிழகத்தில் 1 – 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இஷான் கிஷான் 81 ரன்களும், ரோஹித் சர்மா 41 ரன்களும் எடுத்தனர். மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் RR அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் எடுத்தனர். அதனால் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் காணப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதே நேரத்தில் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் துவங்கி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று நடைபெற இருக்கும் ஆட்டத்திலும் இந்த வெற்றிப் பயணத்தை தொடர முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விளையாட்டு இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்க இருக்கும் நிலையில் இதன் நேரலை ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்கலாம். இதற்கிடையில் போட்டி துவங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ஒன்பதாவது போட்டியின் ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ், ட்ரீம்11 அணி, பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

IPL ஆட்டங்கள்:

ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக 26 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 14 ஆட்டங்களில் வென்றது. 12 ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.

வானிலை அறிக்கை:

போட்டி நாளில், 34% ஈரப்பதம் மற்றும் 19 km/hr காற்றின் வேகத்துடன் வெப்பநிலை 36°C சுற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

பிட்ச் அறிக்கை:

DY பாட்டீல் மைதானத்தின் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நியாயமான பவுன்ஸ் கொடுக்கிறது என்பதால் இது இரு அணிகளுக்கும் உதவியாக இருக்கும்

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:

சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 147 ரன்கள்.

சேஸிங் அணிகளின் பதிவு:

இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி இங்கு சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. அவர்கள் இந்த மைதானத்தில் 80 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளனர்.

உத்தேச XI அணி:

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (WK), ரோஹித் சர்மா (C), சூர்யகுமார் யாதவ், அன்மோல்ப்ரீத் சிங், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பசில் தம்பி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (WK), ஷிம்ரோன் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நாதன் கவுல்டர்-நைல், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்

சிறந்த தேர்வுகள்:

  • மும்பை இந்தியன்ஸ் அணியின் இடது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அணிக்கான சிறந்த தேர்வாக இருக்கிறார். அவர் கடந்த போட்டியில் 81 ரன்கள் எடுத்தார்.
  • பசில் தம்பி – மும்பை இந்தியன்ஸ் அணியின் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் பந்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
  • மும்பை இந்தியன்ஸ் அணியின் வலது கை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாட உள்ளார்.

  • ஜோஸ் பட்லர் – ராஜஸ்தான் ராயல்ஸின் வலது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். கடைசி ஆட்டத்தில் 35 ரன்களை அடித்து நொறுக்கிய அவர், இங்கு மீண்டும் ஒருமுறை சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலது கை பேட்ஸ்மேன். கடந்த போட்டியில் 55 ரன்களை குவித்த அவர், இந்த போட்டியிலும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான தேர்வாக இருப்பார்.
  • டிரென்ட் போல்ட் – வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இங்கும் முக்கியமான விக்கெட்டுகளை வேட்டையாட முடியும்.

கேப்டன் மற்றும் துணை கேப்டன் தேர்வுகள்:

கேப்டன் – ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்

துணை கேப்டன் – பாசில் தம்பி, சூர்யகுமார் யாதவ்

பிளேயிங் XI நம்பர் 1:

கீப்பர்கள் – ஜோஸ் பட்லர், இஷான் கிஷன்

பேட்ஸ்மேன்கள் – ரோஹித் சர்மா, தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆல்-ரவுண்டர் – டேனியல் சாம்ஸ்

பந்துவீச்சாளர்கள் – டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், பாசில் தம்பி (விசி)

பிளேயிங் XI நம்பர்.2:

  • கீப்பர்கள் – ஜோஸ் பட்லர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (சி)
  • பேட்ஸ்மேன்கள் – தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், சூர்யகுமார் யாதவ்
  • ஆல்-ரவுண்டர் – டேனியல் சாம்ஸ், கீரன் பொல்லார்ட்
  • பந்துவீச்சாளர்கள் – பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா

வெற்றி கணிப்பு:

அணி சேர்க்கையை கருத்தில் கொண்டு இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!