IPL அலசல் 2021: டேவிட் வார்னரை அவமதிக்கும் ஐதராபாத் அணி! ரசிகர்கள் ஆவேசம்!!

0
IPL அலசல் 2021 டேவிட் வார்னரை அவமதிக்கும் ஐதராபாத் அணி! ரசிகர்கள் ஆவேசம்!!

IPL அலசல் 2021: டேவிட் வார்னரை அவமதிக்கும் ஐதராபாத் அணி! ரசிகர்கள் ஆவேசம்!!

ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னரை அவமதிப்பதாக ரசிகர்கள் தங்களின் ஆவேசங்களை வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஐபிஎல் திருவிழா 2021:

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆனது கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தொற்று ஏற்பட்டதால், அவை கடந்த ஆண்டை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது நடந்து வருகிறது.

IPL 2021 : DC vs CSK இன்று பலப்பரீட்சை – புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? 

இன்னும் 7 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் இதுவரை சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது. இந்நிலையில் தொடரில் இருந்து முதலில் வெளியேறிய அணி ஐதராபாத். இந்த அணிக்கு வார்னர் தான் தொடக்கத்தில் கேப்டன் ஆக செயல்பட்டார். ஆனால் தொடர் தோல்விகளின் எதிரொலியால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கேன் வில்லியம்சன் கேப்டன் ஆக செயல்பட்டு வருகிறார். ஆயினும் தோல்வியை மட்டுமே அந்த அணி சந்தித்து வருகிறது.

கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும் அவரை அணியில் ஒரு வீரராக அந்த அணி நிர்வாகம் நடத்தவில்லை. போட்டியில் போது ,மட்டுமில்லாது வீரர்கள் குழுவில் இடம் அளிக்கவில்லை. கடைசியாக நடைபெற்ற ஐதராபாத்-கொல்கத்தா போட்டியில் வார்னர் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார். தற்போது இதனை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐதராபாத் அணி வார்னேரின் தலைமையின் கீழ் கடந்த 2016ம் ஆண்டில் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!