“மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா” – முதல்வர் மு.க. ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு!

0
"மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா" - முதல்வர் மு.க. ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு!
“மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா” – முதல்வர் மு.க. ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு!

மதுரையில் இன்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். அதில் பல்வேறு நல திட்ட உதவிகளையும் அறிவிக்க உள்ளார்.

“தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு:

மதுரை மாவட்டத்தில் இன்று “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற தென் மண்டல மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டத்தால் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார். சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 5,000 பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 3.37 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது எனவும், முதல் கட்டத்தில் ரூ.600 கோடி திட்ட மதிப்பில் 5 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. டைடல் பார்க், மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். 2000ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் 2,3ம் நிலை நகரங்களுக்கும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி ரிப்போர்ட் ..! உலக அளவில் 61.59 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த மாநாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விருதுகளையும் முதல்வர் வழங்க உள்ளார். எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாடு விரைவில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு என்றும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் புது தொழில் பெற வேண்டும் என்பதே இலக்கு எனவும் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!