சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட் 2019

0
சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட்
சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட்

சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட் 2019

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட்  2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஆகஸ்ட் 2019

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை அரசு விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது

 • இலங்கை அரசாங்கத்தால் சுற்றுலா நோக்கங்களுக்காக செல்லும் பயணிகளுக்கு விசா கட்டணத்திலிருந்து விலக்கு பெற்றுள்ள 48 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வரும் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நான்கில் ஒரு பங்கு இந்திய சுற்றுலாப் பயணிகள். சுற்றுலா என்பது இலங்கையின் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டு நாணயம் ஈட்டும் துறை ஆகும்.

தெற்காசிய காற்று தர தொழில்நுட்ப முகாமை ஏற்பாடு செய்துள்ளது அமெரிக்க தூதரகம்

 • நேபாளத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் காத்மாண்டுவில் தெற்காசிய காற்று தர தொழில்நுட்ப முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமின் நோக்கம் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் அரசியல், சமூக மற்றும் அறிவியல் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதாகும்

தென் கொரியாவை விருப்பமான வர்த்தக பட்டியலில் இருந்து நீக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 • குறைந்தபட்ச ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அனுபவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து தென் கொரியாவை அகற்றும் திட்டத்திற்கு ஜப்பானின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இது போர்க்கால கட்டாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட தகராறால் தூண்டப்பட்ட பதட்டங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முதல் முறையாக இந்திய ஜனாதிபதி கினியா வருகை

 • இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கினியா தலைநகர் கொனக்ரியை அடைந்தார். திரு. ராம் நாத்கோவிந்திற்கு கினியாவின் ஜனாதிபதி ஆல்ஃபா கான்டே வரவேற்பு அளித்தார். இது கினியாவுக்கு இந்திய ஜனாதிபதி மேற்கொண்ட முதல் அரசு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எஃப் ஆயுத ஒப்பந்தத்திலிருந்து யு.எஸ் விலகுகிறது

 • ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை “இறந்துவிட்டது” என்று அறிவித்த சில நிமிடங்களில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, பாங்காக்கில் நடந்த ASEAN கூட்டத்தில் வாஷிங்டனின் முறையாக ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார், 1987 இடைநிலை-அணுசக்தி படைகள் (ஐ.என்.எஃப்) உடன்படிக்கை நடுத்தர தூர ஏவுகணைகளின் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதாக உள்ளது.

இந்திய உதவியுடன் கட்டப்பட்ட மாடல் கிராமம் இலங்கையில் திறக்கப்பட்டது

 • இந்திய உதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட காந்தி நகர் மாடல் கிராமம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. இந்திய உதவியுடன் கட்டப்பட்டு வரும் 100 மாதிரி கிராமங்களில் இது இரண்டாவது மற்றும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் நினைவாக பெயரிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. அணுசக்தி தடையில் கையெழுத்திட ஜப்பானை ஹிரோஷிமா மேயர் வலியுறுத்தினார்

 • ஆகஸ்ட் 6ல் உலகின் முதல் அணு ஆயுத தாக்குதலை சந்தித்து 74 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில், அணு ஆயுதங்களை தடைசெய்யும் ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜப்பானை ஹிரோஷிமா மேயர் வலியுறுத்தினார்.மேலும் ஆகஸ்ட் 6, 1945 குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் பிரதமர் ஷின்சோ அபே ஹிரோஷிமாவில் அமைதி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தினார்.

வெனிசுலா அரசாங்க சொத்துக்களை முடக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார

 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 5 ம் தேதி அமெரிக்காவில் உள்ள அனைத்து வெனிசுலா அரசாங்க சொத்துக்களையும் முடக்க உத்தரவிட்டார், சோசலிஸ்ட் ஜனாதிபதி நிக்கோலா மதுரோவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

ரஷ்யாவுடன் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் பங்களாதேஷ் கையெழுத்திட்டது

 • பங்களாதேஷ் தனது 2,400 மெகாவாட் ரூபூர் அணுமின் நிலையத்திற்கு (ஆர்.என்.பி.பி) யுரேனியம் வாங்குவதற்காக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யா வாழ்நாள் முழுவதும் ஆலைக்குத் தேவையான அணு எரிபொருளை வழங்கும்.

ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது

 • ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது மேலும் அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு நிலையான நிதி ஆதரவை உறுதி செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது. யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ 1950 முதல் ஜோர்டான், லெபனான், சிரியா, மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் சுகாதாரம், கல்வி, நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.

விசா இல்லாத நுழைவு உரிமையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது

 • கடந்த எட்டு ஆண்டுகளில் வட கொரியாவுக்கு பயணம் செய்த வெளிநாட்டினருக்கான விசா இல்லாத நுழைவு உரிமையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை வட கொரியா நாட்டின் புதிய சுற்றுலாத் துறைக்கு புதிய அடியைக் கொடுக்கக்கூடும்.

2019 சுதேச மொழிகளின் சர்வதேச ஆண்டு

 • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 2019 ஐ சுதேச மொழிகளின் சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது.பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ‘வாழும்’ சுதேசிய மொழிகளைக் கொண்டுள்ளது (840), இந்தியா 453 உடன் நான்காவது இடத்தில் உள்ளது.

தென் கொரியாவுக்கு ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

 • சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 12 மல்டி மிஷன் சீஹாக் ஹெலிகாப்டர்களை தென் கொரியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்த ஹெலிகாப்டர்கள் நிலங்களில் ஏற்படும் தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் மொள்ளமாய் ஏற்படும் தாக்குதல் தொடர்பான பணிகளை மேம்படுத்துகின்றன, மேலும் தேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற இரண்டாம் நிலை பணிகளையம் இதனால் கையாள முடியும்.1950-53 கொரியப் போரிலிருந்தே இரு நாடுகளும் பாதுகாப்பு கூட்டணியில் உள்ளன.

இந்தியா, பங்களாதேஷ் நீர்வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த குழு அமைக்கவுள்ளது

 • கங்கை நீர் பகிர்வு உடன்படிக்கை 1996 இன் கீழ் பங்களாதேஷால் பெறப்படும் கங்கை நீரை உகந்த முறையில் பயன்படுத்த ஒரு கூட்டு தொழில்நுட்பக் குழுவை அமைக்க இந்தியாவும் பங்களாதேஷும் ஒப்புக் கொண்டுள்ளன.
 • கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா மெகா பேசின் உலகின் இரண்டாவது பெரிய ஹைட்ராலிக் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரி உலகின் மிக உயர்ந்த ஏரியாக மாறலாம்

 • நேபாளில் உள்ள மனாங் மாவட்டத்தில் உள்ள காஜின் சாரா ஏரி சில மாதங்களுக்கு முன்பு மலையேறுபவர்களின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது சாமே கிராமப்புற நகராட்சியின் சிங்கர்கர்கா பகுதியில் அமைந்துள்ளது. நேபாளத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஏரியானது நேபாலில் 4,919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மற்றும் தற்போது உயரமான ஏரி என்னும் பேர்கொண்டுள்ள திலிச்சோவை மாற்றி உலகின் மிக உயர்ந்த ஏரியாக மாறும் கட்டத்தில் உள்ளது.

சூறாவளி லெக்கிமா

 • சீனா நாட்டின் கிழக்குப் பகுதியில் சூறாவளி லெக்கிமாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. லெகிமா ஷாங்காயின் வடக்கே ஜியாங்சு மாகாணத்திற்குள் நுழைந்து ஷாண்டோங் மாகாணத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் சுரபயா திட்டம்

 • இந்தோனேசியா சுரபயா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பயணிகள் பயண டிக்கெட்டுகளுக்கு குப்பைகளை மாற்றலாம். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஒரு வெற்றியாக அமைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 16,000 பயணிகள் ஒவ்வொரு வாரமும் இலவச பயணத்திற்காக குப்பைகளை மாற்றுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்தோனேசியா சீனாவின் பின்னால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் மாசுபடுத்தியாகும். மறுசுழற்சியை அதிகரிப்பது பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் 2025 ஆம் ஆண்டளவில் அதன் நீரில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை 70% குறைப்பதாக இந்தோனேசியா உறுதியளித்துள்ளது.

வெடிக்காத இரண்டாம் உலகப் போர் குண்டு கிரெம்ளினில் கண்டுபிடிக்கப்பட்டது

 • வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் குண்டு கட்டுமானப் பணிகளின் போது மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு கிரெம்ளின் 1941 மற்றும் 1942 க்கு இடையில் வீசப்பட்ட குண்டாகும்.

கடுமையான வெப்பமண்டல புயல் குரோசா

 • பலத்த காற்று மற்றும் மழையுடன் சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல் குரோசா ஜப்பானை தாக்கியது. சூறாவளிக்கு சற்று குறைவான இந்த கடுமையான வெப்பமண்டல புயலான குரோசா மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் தெற்கு ஹிரோஷிமா பிராந்தியத்தில் மோதியது.

2014 ஆம் ஆண்டில் இறந்த ஐஸ்லாந்தின் ஓக்ஜோகுல் பனிப்பாறை நினைவுகூரப்பட்டது

 • ஐஸ்லாந்தில், பனிப்பாறை ஓக்ஜோகுல்லின் இழப்பை நினைவுகூரும் வகையில் மக்கள் அனைவரும் ஓன்றாக கூடவுள்ளார்கள் , இந்த பனிப்பாறை 2014 ஆம் ஆண்டில் தனது 700 வது  வயதில் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பனிப்பாறை இறந்ததாக ஐஸ்லாந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஜப்பான் கோவிலில் ரோபோ மதகுரு

 • ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலில் ரோபோ மதகுரு புத்த மதத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. புத்த இரக்கத்தின் கருணையை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு கண்ணன், கியோட்டோவில் உள்ள கோடாய்ஜி கோவிலில் பிரசங்கம் செய்கிறார், மற்றும் இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு (AI) உடன் ஒரு நாள் வரம்பற்ற ஞானத்தைப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் Bavar பவர் -373 ஏவுகணை

 • ஈரான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீண்ட தூர, தரையிலிருந்து விண்ணைத்தாக்கும் அமைப்பான Bavar பவர் -373 ஏவுகணையை வெளியிட்டது. ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச தடைகளை எதிர்கொண் ஈரான் ஒரு பெரிய உள்நாட்டு ஆயுதத் தொழிலை உருவாக்கியுள்ளது.
 • இந்த நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பால் 300 கிமீ (190 மைல்) க்கு மேல் உள்ள இலக்குகள் அல்லது விமானங்களைக் கண்டறிந்து, அதை 250 கிமீ தொலைவில் லாக் செய்து ,200 கிமீ தொலைவில் அழிக்க  முடியும்.

அமெரிக்கா-இந்தியா 2 + 2 உரையாடல் 

 • இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்த நிலையில், “முக்கியமான பாதுகாப்பு முன்னுரிமைகள் மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க “அமெரிக்கா-இந்தியா 2 + 2 உரையாடலின் ஒரு சந்திப்புக் கூட்டத்தை, அமெரிக்கா கலிபோர்னியாவில் நடத்துகிறது. மூலோபாய கூட்டாட்சியை வலுப்படுத்துதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

எவரெஸ்ட் பிராந்தியத்தில் நேபாளம் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தடை செய்கிறது

 • ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை தடை செய்வதன் மூலம் நேபாளம் 2020 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் பிராந்தியத்தை பிளாஸ்டிக் இல்லாத மண்டலமாக மாற்றும், இந்த பிளாஸ்டிகை தடை செய்வதன் மூலம் பூமியின் மேற்பரப்பின் மிக உயர்ந்த இடத்தில் அதிகப்படியான மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். இந்த புதிய விதி 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று நேபால் அரசு அறிவித்துள்ளது.

இந்தியா, பிரான்ஸ் கப்பல்களின் செயற்கைக்கோள் கண்காணிப்பைத் திட்டமிட்டன

 • இந்தியாவும் பிரான்சும் சுமார் 10 பூமியின் தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்களின் தனித்துவமான தொகுப்பை உருவாக்கி ஏவவுள்ளன, அவைகள் தொடர்ந்து கடல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும். இந்த குறைந்த தாழ்வான சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பயங்கரவாதம், திருட்டு, கடத்தல், எண்ணெய் கசிவுகளின் ஆதாரம் ஆகியவற்றை கண்காணிக்கும்.

ஈரான் அரசு கால்பந்து போட்டிக்கு பெண் பார்வையாளர்களை அனுமதிக்கவுள்ளது

 • ஈரானில், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் மைதானத்திற்குள் பெண் ரசிகர்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவர் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் போட்டிகளில் பெண் பார்வையாளர்களை ஈரான் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.

காங்கோ ஜனநாயக குடியரசு புதிய அரசாங்கத்தை அறிவித்தது

 • காங்கோ ஜனநாயகக் குடியரசில், புதிய ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெக்கெடி பதவியேற்ற ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒரு கூட்டணி அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1960 ல் இந்த கனிம வளமான நாடு பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து காங்கோ ஜனநாயகக் குடியரசின் முதல் அமைதியான அதிகார மாற்றத்தைக் குறிக்கும் தேர்தல்களில் திரு சிசெக்கி வெற்றி பெற்றார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியாவின் சிலிகுரி வரை பஸ் சேவை தொடங்கியது

 • நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுக்கும் மேற்கு வங்காளத்தின் இந்தியாவின் சிலிகுரிக்கும் இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் ரகுபீர் மகாசேத் மற்றும் இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் காத்மாண்டுவிலிருந்து பேருந்தை கோடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

காசி நஸ்ருல் இஸ்லாமின் 43 வது நினைவு தினம் பங்களாதேஷில் அனுசரிக்கப்பட்டது

 • கிளர்ச்சிக் கவிஞரான காசி நஸ்ருல் இஸ்லாமின் 43 வது நினைவு தினம் ஆகஸ்ட் 27 அன்று பங்களாதேஷில் அனுசரிக்கப்பட்டது. கிளர்ச்சி கவிஞர் அல்லது பித்ரோஹி கோபி என்றழைக்கப்படும் நஸ்ருல் கிட்டத்தட்ட 3000 பாடல்களை எழுதி, அவற்றில் பலவற்றை இயக்கியுள்ளார், அவை அணைத்தும் நஸ்ருல் கீதி என்று அழைக்கப்படுகின்றது. அவரது கவிதைகள் பங்களாதேஷின் விடுதலைப் போரின் போது மக்களுக்கு பெரிய தூண்டுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி-புடின் உச்சிமாநாட்டின் போது நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க ரஷ்யா திட்டமிட்டது

 • அடுத்த வாரம் விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாட்டில் ரஷ்யா தனது வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை கடற்படையின் திட்டம் -75 ஐ கீழ் வழங்கவுள்ளது.

இந்தியா, நேபாளம் எக்சிம் வங்கியின் வழிகாட்டுதல்கள் குறித்த பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்தது

 • நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் நேபாளத்தின் தேசிய புனரமைப்பு ஆணையம் (என்.ஆர்.ஏ) காத்மாண்டுவில் ஏற்றுமதி-இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் கடன் வரி வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து இரண்டு நாள் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் மூத்த வல்லுநர்கள் இந்த பயிற்சித் திட்டத்தை நடத்தினர், இதில் நேபாள அரசின் 27 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பங்களாதேஷ் அரசு நாட்டில் மாதிரி மசூதிகள் அமைக்கவுள்ளது 

 • பங்களாதேஷ் அரசு நாடு முழுவதும் 560 மாதிரி மசூதிகள் மற்றும் இஸ்லாமிய கலாச்சார மையங்களை அமைக்கவுள்ளது. இந்த மையங்களில் குர்ஆன் பாராயணம் செய்வதற்கான நூலகம் மற்றும் ஏற்பாடு இருக்கும். மதத்தின் பெயரில் போர்க்குணம் மற்றும் தீவிரவாதம் பரவுவதைத் தடுக்க இஸ்லாமின் “துல்லியமான மற்றும் சரியான” தகவல்களைப் பிரசங்கிப்பதற்கான மாதிரி மசூதி மையங்களை உருவாக்க பங்களாதேஷ் அரசு விரும்புகிறது.

 Download PDF

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!