வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 300+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!

0
வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 300+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!
வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 300+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!
வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! 300+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!

இந்தியாவின் வதோதரா பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி இப்போது தனது நிறுவனங்களில் காலியாக இருக்கும் 300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலைவாய்ப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி வங்கித்துறை நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. அந்த வகையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பரோடா வங்கி இப்போது 325 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் இவ்வங்கி, தனது அலுவலகங்களில் காலியாக இருக்கும் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது பரோடா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்,

முக்கிய தேதிகள்:

விண்ணப்பதாரர்கள் 22.06.2022 முதல் 12.07.2022 வரையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

கல்வித்தகுதி:

CA/ CFA/ CS/ CMA படிப்பில் இளங்கலை அல்லது பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்..

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 25 முதல் 42க்குள் இருக்க வேண்டும்.
  • இந்த வயது விவரங்கள் பதவிகளுக்கு ஏற்றபடி வித்தியாசப்படும்.

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • EWS/ OBC மற்றும் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும்.
  • அதே போல SC/ST/ PWD/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு குறித்த முக்கிய தகவல்களை https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here