கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை – வெற்றி கண்டுள்ள வடகொரியா!

0
கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை - வெற்றி கண்டுள்ள வடகொரியா!
கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை – வெற்றி கண்டுள்ள வடகொரியா!

கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஏவுகணை சோதனை:

உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதை தடை செய்யுள்ளது. இதனால் பயங்கர பேரழிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த சோதனைகள் தடி செய்யப்பட்டுள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் இது போன்ற ஆயுத கண்டறியும் சோதனை நிகழ்த்துவதை தடி செய்துள்ளதுடன் உன்னிப்பாக கவனித்தும் வருகிறது. ஆனால் உலகின் எந்த நாட்டுடனும் நட்பு ரீதியாக கூட பழகாத நாடாக வடகொரியா உள்ளது.

ஐபோன் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை!

இங்கு என்ன நடக்கிறது என்பது மற்ற எந்த நாடுகளுக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. உலக நாடுகள் கடைபிடிக்கும் எந்த பொதுவான விஷயமும் வடகொரியாவில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதேபோல், தடை செய்யப்பட்டுள்ள ஆயுத பரிசோதனைகள் மற்றும் உற்பத்தி போன்ற எந்த கட்டுப்பாட்டையும் வடகொரியா பின்பற்றவில்லை. இந்நிலையில், தற்போது, வட கொரியா இரண்டு ஆண்டுகளாக 1,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து வந்தது. இந்த ஏவுகணையின் சோதனை வட கொரிய ராணுவ தலைமை தளபதி பாக் ஜாங் சோன் முன்னிலையில் நடந்தது.

TN Job “FB  Group” Join Now

ஒரு டிரக்கில் இருந்து பாய்ந்த ஏவுகணை, வானில் 126 நிமிடங்கள் நீள் வட்டமாக பல முறை சுற்றி வந்து, இலக்கை வீழ்த்தி, கடலில் விழுந்தது.இதையடுத்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக கூறி, அதன் புகைப்படங்களை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை குறித்து, அண்டை நாடான தென் கொரியா மற்றும் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளன. வட கொரியாவுக்கு அண்டை நாடான ஜப்பானின் பெரும் பகுதி நிலத்தை இந்த ஏவுகணை தாக்கும் வல்லமை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!