ஐபோன் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை!

0
ஐபோன் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை!
ஐபோன் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை!
ஐபோன் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை!

பலரின் கனவாக உள்ள ஸ்மார்ட் போன் என்று சொல்லப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைலை உபயோகம் செய்பவர்களின் கவனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐபோன்:

ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் தொலைபேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தால் செயல்படுகிறது. இந்த மொபைலில் தொடுதிரைத் தொழில்நுட்பம் உள்ளது. முதல் தலைமுறை ஐபோன் ஜூன் 29, 2007 அன்று வெளியிடப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் இயங்கும் ஆப்பிள் கம்யுட்டர் நிறுவனம் ஐபோன்களை தயாரிக்கிறது. ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ள ஒரு விஷயம் ஆகும். அந்த அளவிற்கு பல தொழில்நுட்ப வசதிகள் ஐபோனில் உள்ளது.

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் – கொரோனா பரவல் எதிரொலி!

தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது சப்போர்ட் வலைதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐபோன்களின் கேமரா தரம் குறித்து வெளியிட்டு உள்ள புது தகவல் ஐபோன் பயனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த அறிவிப்பில், அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் என்ஜின் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஐபோன் கேமரா தரத்தை குறைத்துவிடும் என்று தெரிவித்துள்ளது. சமீபத்திய ஐபோன் மாடல்களில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் எனப்படும் IOS மற்றும் க்ளோஸ்டு லூப் ஆட்டோபோக்கஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

தொடர்ச்சியாக அதீத அதிர்வலைகளில் ஐபோன் பயன்படுத்தினால், கேமராக்களின் தரம் குறைய ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ​இதனால் ஐபோன்களில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் குறையும். இதனால் ஐபோன் பயன்படுத்துவோர் அதனை அதிக என்ஜின் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளில் பொருத்துவதை ஆப்பிள் பரிந்துரைக்கவில்லை. மேலும் சிறிய என்ஜின் கொண்ட வாகனங்கள், எலெக்ட்ரிக் என்ஜின் கொண்ட மொபெட் மற்றும் ஸ்கூட்டர்களில் ஐபோன்களை பொருத்துவதாலும் கூட IOS மற்றும் ஏ.எப். சிஸ்டம்கள் பாதிக்கப்படலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!