மக்களுக்கு காப்பீட்டு பணம் உயருமா?.. பட்ஜெட்டில் வரும் சூப்பர் அப்டேட் – வெளியான தகவல்!

0
மக்களுக்கு காப்பீட்டு பணம் உயருமா?.. பட்ஜெட்டில் வரும் சூப்பர் அப்டேட் - வெளியான தகவல்!

இந்தியாவில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதில் சில நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் அறிவிப்பு

நாட்டின் 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்.1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். இதை இடைக்கால பட்ஜெட்டாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த முறை பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு வரம்பு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த பட்ஜெட்டில் காப்பீட்டு தொகையை மத்திய அரசு இரட்டிப்பாக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சமாக உள்ள நிலையில் அதனை ரூ.10 லட்சமாக உயர்த்தலாம் என சில கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த திட்டம் மூலம் புற்றுநோய் மற்றும் பிற ஆபத்தான நோய்களுக்கு சிகிச்சை இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

NIELIT நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,67,000/- மாத ஊதியம்!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!