‘இன்ஸ்பிரேஷன்-4’ விண்வெளி சுற்றுலா பயணம் வெற்றி – வரலாற்று சாதனை!

0
'இன்ஸ்பிரேஷன்-4' விண்வெளி சுற்றுலா பயணம் வெற்றி - வரலாற்று சாதனை!
'இன்ஸ்பிரேஷன்-4' விண்வெளி சுற்றுலா பயணம் வெற்றி - வரலாற்று சாதனை!
‘இன்ஸ்பிரேஷன்-4’ விண்வெளி சுற்றுலா பயணம் வெற்றி – வரலாற்று சாதனை!

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் திட்டம் வெற்றிகரமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 சாதாரண மக்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

விண்வெளி சுற்றுலா:

விண்வெளிக்கு ஆய்வு பணிகளுக்காக விஞ்ஞானிகள் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக விண்வெளி குறித்து அதிக ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல வருடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு விண்வெளிக்கு ஆய்வு பணிகளுக்காக சென்று வருவார்கள். தொடர்ந்து விண்வெளி துறையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணம் நடத்த வேண்டும் என்று பல முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தது.

வாராக்கடன் பிரச்சனைகளுக்காக ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் – மத்திய நிதியமைச்சர் தகவல்!

அதில், விண்வெளிக்கு வர்த்தக ரீதியான சுற்றுலாவை நடத்துவதில், எலான் மஸ்க் (ஸ்பேஸ் எக்ஸ்), ரிச்சர்ட் பிரான்சன் (வெர்ஜின் கேலக்டிக்ஸ்), ஜெப் பெசோஸ் (புளு அரிஜன்) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் அனைவரும் கடந்த மாதம் அடுத்தடுத்து தங்களின் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பினர். இந்நிலையில், அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜாரெட் ஐசக்மேன் உட்பட 4 பேர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை வெற்றிகரமாக விண்வெளி பயணம் சென்றுள்ளனர். இந்த பயணத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்-4’ என பெயரிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவெரல் விண்வெளி தளத்தில் இருந்து ‘டிராகன் கேப்சூல்’ விண்கலம் புறப்பட்டு சென்றது. இது, முழு முழுக்க தானியங்கி முறையில் செயல்படக் கூடியது. இதில் சென்றவர்களில் 2 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் ஆவர். மேலும், சாதாரண மக்களை சேர்ந்தவர்கள். இந்த சுற்றுலாவின் மொத்த காலம் 3 நாட்கள். அதன் பிறகு, இவர்கள் பூமிக்கு திரும்புவார்கள். இதற்காக இவர்களுக்கு 9 மாதங்கள் விண்வெளி பயணத்துக்கான ஆயத்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சாதாரண மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய முதல் நிறுவனம் என்ற வரலாற்று பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!