ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 ஆக குறைவு – மத்திய அரசு அறிவிப்பு!

0
ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 ஆக குறைவு - மத்திய அரசு அறிவிப்பு!
ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 ஆக குறைவு - மத்திய அரசு அறிவிப்பு!
ஜூலை மாதத்தில் பணவீக்கம் 6.71 ஆக குறைவு – மத்திய அரசு அறிவிப்பு!

கடந்த சில மாதங்களாகவே நாட்டில் பணவீக்கம் உயர்ந்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் பணவீக்கம் குறைந்துள்ளதால் உணவு பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

பணவீக்கம் குறைவு:

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதை பொறுத்து தான் அனைத்து அன்றாட பொருட்களின் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் பணவீக்கம் 7.75% ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் மட்டுமல்லாமல் கடந்த மூன்று மாதங்களாகவே பணவீக்கம் 7% க்கும் மேலாகவே இருந்து வந்தது. இதற்கு பிறகு பணவீக்கம் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஐஐபி தரவுகளின்படி மே மாதத்தில் பணவீக்கம் 19.6% ஆக இருந்தது. இதற்கு பிறகு ஜூன் மாதத்தில் 12.3% ஆக இருந்து வந்தது.

அதே போல உற்பத்தி துறையிலும் ஜூன் மாதத்தில் வளர்ச்சி விகிதமானது 12.5% ஆக இருந்தது மற்றும் ஜூன் மாதத்தில் சுரங்கத் துறை 7.5% ஆகவும், மின்சார துறையில் வளர்ச்சி விகிதம் 16.4% ஆகவும் அதிகரித்தது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 7.01% ஆக இருந்தது. இதற்கு பிறகு ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் 100% சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் உத்தரவு

Exams Daily Mobile App Download

அதே போலவே, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 6.71 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, சில்லறை பணவீக்கத்தின் விகிதம் குறைந்ததால் மட்டுமே உணவு பொருட்களின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் விகிதம் 5.59 சதவீதமாக இருந்தது. இதனால், கடந்த ஆண்டு உணவு பொருட்களின் விலை இந்த ஆண்டை விட குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!