குறைந்த கட்டண ‘ஏசி’ ரயில் பெட்டி – இந்திய ரயில்வே அறிமுகம்!!
இந்திய ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் பயணியருக்கான ‘ஏசி’ ரயில் பெட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ரயில்வே துறை:
இந்திய ரயில்வே துறை நாட்டின் மக்களுக்காக பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபகாலமாக நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறது. அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஆளில்லாத ரயில் திட்டத்தையும் தொடங்கியது ரயில்வே நிர்வாகம்.
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு – அரசு தேர்வுத்துறை இயக்குனர்!!
புதிய திட்டம்:
இந்நிலையில் புதிய தொழில்நுட்பத்தின் வரிசையில் மூன்றடுக்கு ஏசி ரயில் பெட்டிகள் புதிதாக நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள கபுர்தலாவில் ரயில் பெட்டி தயாரிக்கும் ஆலையில் இந்த புதிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
ரயில்வே அமைச்சகம் அறிக்கை:
புதிய திட்டத்தை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் மக்களுக்காக இந்த ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இதில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையை இந்த திட்டம் உயர்த்தும். மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, சிற்றுண்டிக்காக மடிக்கும் மேஜை, கழிவறை வசதி, ஊனமுற்றவர்களுக்காக தனி கதவுகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்