Tokyo Olympics Wrestling 2020 – இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி!

0
Tokyo Olympics Wrestling 2020 - இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி!
Tokyo Olympics Wrestling 2020 - இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி!
Tokyo Olympics Wrestling 2020 – இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி!

இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் புஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸர் என்பவரை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், அதற்கு அடுத்த போட்டியில் ஈரானிய வீரரை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மல்யுத்த போட்டி

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் துவங்கி 14 வது நாளான இன்று (ஆகஸ்ட் 6) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் ஹாக்கி, மல்யுத்தம், தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இன்று காலை துவங்கிய ஹாக்கி போட்டியில் மகளிர் அணி தோல்வியை சந்தித்தது.

சென்னைவாசிகள் கவனத்திற்கு..! 3 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் – சுதந்திர தின விழா ஒத்திகை!

உலகின் 2 ஆம் நிலை வீரரும், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கத்தை பெற்று சாதனை படைத்த பஜ்ரங் புனியா ஒலிம்பிக் பதக்கத்துக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் புனியா கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸர் என்பவரை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றுள்ளார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் – இன்று முதல் துவக்கம்!

இதை தொடர்ந்து நடைபெற்ற ஒலிம்பிக் பதக்கத்துக்கான அரையிறுதி போட்டியில் ஈரானின் மோர்டேசா காசியை இவர் எதிர்கொண்டு 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனிடையே பெண்களுக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைலின் முதல் சுற்றில் துனிசாவின் சர்ரா ஹம்டியிடம் வீழ்ந்துள்ளார். இதற்கு முன்னதாக ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி குமார் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!