பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசுகள் நடவடிக்கை!!

0
பள்ளி, கல்லூரிகள் மூடல் - மாநில அரசுகள் நடவடிக்கை!!
பள்ளி, கல்லூரிகள் மூடல் - மாநில அரசுகள் நடவடிக்கை!!
பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசுகள் நடவடிக்கை!!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக மகாராஷ்டிரா, டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தாக்கம்:

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் தேர்வுகள் நடத்த உள்ள மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

மகாராஷ்டிரா:

நாடு முழுவதும் கொரோனா பரவலில் முதலிடம் பிடித்த மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி:

டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் 8 ஆம் வகுப்பு வரை மூடப்பட்டு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது. மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வர மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாணவர்கள் கோரிக்கை!!

பீகார்:

பீகாரில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து இந்த முடிவுகளில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம்:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிகள் 8 ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியிட்டார்.

சத்தீஸ்கர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!

தமிழ்நாடு:

தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 9 ஆம் தேதி முதல் மூடப்பட்டு மறுஉத்தரவு வரும் வரை திறக்கப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மூடப்படும். மேலும் தற்போது பொதுத்தேர்வு நடைபெற ஏற்ற சூழல் இல்லாத காரணத்தினால் அந்த தேதிகளில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகள் 5 ஆம் வகுப்பு வரை மூடப்பட்டுள்ளன. மேலும் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 8 ஆம் வகுப்பு தேர்வு மே 6, 9 ஆம் வகுப்பு ஏப்ரல் 26, 11 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 24 ஆம் தேதியும் நடைபெறும்.

Gold Rate in Chennai – இன்றைய தங்க விலை நிலவரம்!!

ஜம்மு-காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகள் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசம்:

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் ஏப்ரல் 8 வரை மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!