இந்தியாவில் 40,000 டன் எடையில் விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) – மோடி பெருமிதம்!

0
இந்தியாவில் 40,000 டன் எடையில் விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) - மோடி பெருமிதம்!
இந்தியாவில் 40,000 டன் எடையில் விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) - மோடி பெருமிதம்!
இந்தியாவில் 40,000 டன் எடையில் விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) – மோடி பெருமிதம்!

இந்தியாவில் 25 ஆண்டுகளாக மிக பெரிய போராட்டங்களுக்கு பிறகு தயார் செய்யப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் 40,000 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் இந்தியாவிற்கு பெருமை வாங்கி கொடுத்திருப்பதாக மோடி அறிவித்துள்ளார்.

போர்க்கப்பல்

விமானம் தாங்கி போர்க்கப்பலான (IAC-1) ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவிற்காக அர்ப்பணித்தார். 40,000 டன்கள் எடை கொண்ட இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட இந்த போர் கப்பல் சுதேசி வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மிக பெரிய போர் கப்பலை உருவாக்கிய நாடுகளின் உயரடுக்கு பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. மேலும், 25 ஆண்டுகளாக இந்த போர்க்கப்பலை உருவாக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். இந்த மூன்று ஆண்டு காலத்தில் மூன்று பிரதமர் பதவி மாறி விட்டனர்.

மேலும், மோடி இந்த போர்க்கப்பலை உருவாக்க இத்தனை ஆண்டுகளாக உழைத்த இந்திய கடற்படை, புத்திசாலித்தனமான மற்றும் வளர்ந்து வரும் வடிவமைப்பு பணியகம், பொறியாளர்கள் மற்றும் கடல் போர் தொலைநோக்கு பார்வையாளர்கள் அனைவரையும் பாராட்டியுள்ளார். மேலும், 14 அடுக்குகள் கொண்ட இந்த போர் கப்பலில் மொத்தமாக 2,300 அறைகள் இருக்கின்றன. மேலும், அதிகபட்ச வேகமாக 28 நாட்ஸ் வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி புகழுக்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேலும், இந்த ஒரு போர் கப்பலில் மட்டுமே 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இருக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்படை அதிகாரிகள், வீரர்கள் உட்பட 1,700 பேர் இந்த கப்பலில் இருப்பார்கள். மேலும், 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்ட இந்த போர் கப்பலில் புதிய கடற்படை கொடி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மேலும், இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாடு முழுவதும் மிக பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!