இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 47,092 பேருக்கு தொற்று, 509 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 509 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 47,092 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக அதிகரித்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு!
அதனை தொடர்ந்து புதிதாக 509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,39,529 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்த போதிலும் உயிரிழப்புகள் தொடர்கிறது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதிகம் பரவி வருகிறது. தற்போது அதிகரிக்கும் பாதிப்புகள் மூன்றாம் அலையின் அறிகுறிகள் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர் கூறியுள்ளார். மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
மேலும் நேற்று ஒரே நாளில் 35,181 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,28,825 ஆக உள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.51% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,89,583 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.