தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு!

0
தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - அரசாணை வெளியீடு!
தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - அரசாணை வெளியீடு!
தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு!

தமிழக அரசுப்பணிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசுப்பணி:

தமிழ்நாடு அரசுப்‌ பணி நியமனங்களில்‌, தமிழ்‌ வழியில்‌ கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்‌ வகையில்‌, 2010-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழ்‌ வழியில்‌ கல்வி பயின்றவர்களை அரசின்‌ கீழ்வரும்‌ பணிகளில்‌ முன்னுரிமையின்‌ அடிப்படையில்‌ பணி நியமனம்‌ செய்தல்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. நேரடி நியமனத்திற்கான காலிப்‌ பணியிடங்களில்‌, நூற்றுக்கு இருபது விழுக்காடு பணியிடங்களை தமிழ்‌ வழியில்‌ கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்‌ ஒதுக்கீடு செய்வதற்கு அச்சட்டத்தில்‌ வழிவகை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யூனியன் வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப் 3 இறுதி நாள் !

அதன்‌ பின்னர்‌, குறிப்பிட்ட பதவிக்கென எற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில்‌, நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதி வரை தமிழ்‌ வழியில்‌ பயின்றவர்கள்‌ மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைவர்கள்‌ என்ற வகையில்‌, பார்வை நான்கில்‌ காணும்‌ திருத்தச்‌ சட்டத்தின்‌ மூலமாக உரிய திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டன. அதற்கான வரைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

  • வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியானது 10 ஆம்‌ வகுப்பாக இருப்பின்‌, 10-ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழிக்‌ கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌.
  • வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதியானது மேல்நிலை வகுப்பாக (12-ஆம்‌ வகுப்பு) ஒருப்பின்‌, 10-ஆம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை வகுப்பினை தமிழ்‌ வழிக்‌ கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌.
  • வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதியானது பட்டயப்‌ படிப்பாக இருப்பின்‌, 10-ஆம்‌ வகுப்பு மற்றும்‌ பட்டயப்‌ படிப்பினை தமிழ்‌ வழி கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌ அல்லது மேல்நிலை வகுப்பிற்குப்‌ பின்‌ பட்டயப்‌ படிப்பினை முடித்திருந்தால்‌, 10-ஆம்‌ வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும்‌ பட்டயப்‌ படிப்பினை தமிழ்‌ வழி கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌.
  • வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதியானது பட்டப்‌ படிப்பாக இருப்பின்‌, 10-ஆம்‌ வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும்‌ பட்டப்‌ படிப்பினை தமிழ்‌ வழிகல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌.
  • வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதியானது முதுகலைப்‌ பட்டப்‌ படிப்பாக ஒருப்பின்‌, 10-ஆம்‌ வகுப்பு, மேல்நிலை வகுப்பு, பட்டப்‌ படிப்பு மற்றும்‌ முதுகலைப்‌ பட்டப்‌ படிப்பினை தமிழ்‌ வழி கல்வியில்‌ பயின்றிருக்க வேண்டும்‌.

TNPSC வேலைவாய்ப்புகள் 2021 – விண்ணப்பிக்க செப் 24 கடைசி நாள் !

மேலும் இதர மொழிகளை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும்‌ தமிழில்‌ எழுதியவர்கள்‌, இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள்‌ அல்ல. 1 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல்‌ நேரடியாக 10ஆம்‌ வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித்‌ தேர்வர்கள்‌ மற்றும்‌ பிற மாநிலங்களில்‌, தமிழ்‌ அல்லாமல்‌ இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்பு இம்மாநிலத்தில்‌ நேரடியாகச்‌ சேரும்‌ வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள்‌ வரை தமிழ்‌ வழியில்‌ பயின்றவர்கள்‌ இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள்‌ அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here