சீன நாட்டின் 232 செயலிகளை பயன்படுத்த தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

0
சீன நாட்டின் 232 செயலிகளை பயன்படுத்த தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
சீன நாட்டின் 232 செயலிகளை பயன்படுத்த தடை - மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
சீன நாட்டின் 232 செயலிகளை பயன்படுத்த தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பாதகமாக இருக்கும் செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் 232 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்வதாக அறிவித்துள்ளது.

சீன செயலி:

இந்திய நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் சீன தேச மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த 2020 முதல் தடை விதித்து வருகிறது. அந்த வகையில் டிக்-டாக் செயலி முதல் தற்போது பல வகையான செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சீன நாட்டுடன் தொடர்பில் இருக்கும் மற்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் போலி கடன் செயலிகள் மூலமாக கடன் பெற்றவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஏனெனில் இந்த போலி கடன் செயலிகள் கடன் கொடுப்பது போன்று கொடுத்துவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாக கடன் தொகையும் மற்றும் வட்டியுடன் சேர்த்து அதிக பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் இந்திய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் -மதுரை ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியீடு!!

அத்துடன் ஆய்வு மேற்கொண்டதில் இந்த செயலிகள் அனைத்திற்கும் சீன தேசத்தை சேர்ந்தவர்கள் மூளையாக இருப்பதாக கண்டறியப்பட்டது. அதனால் உள்துறை அமைச்சகம் பரிந்துரையின்படி, சுமார் 138 Betting செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் மற்றும் முடக்கவும் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இச்செயலிகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான விஷங்களையும் கொண்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!