மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – பிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு - பிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு - பிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – பிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் என்றும் இதன் மூலம் அவர்களின் ஊதியத்தில் பெறும் உயர்வு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வு

கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (DA) உயர்வுத்தொகை இன்னும் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாத நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை மாத தவணைக்கான DA உயர்வு 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால், அதிகரிக்கப்பட்ட டிஏவுடன் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் உயர்வடையலாம்.

Exams Daily Mobile App Download

இப்போது அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ஃபிட்மென்ட் காரணியுடன் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இப்போது ஊதிய உயர்வு குறித்து வெளியான அறிக்கைகளின்படி, பொருத்துதல் காரணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கலாம். இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வட்டி விகிதம் குறித்த விவரம் இதோ!

அவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அல்லது அடிப்படை ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும். இதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு 2017ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போது அடிப்படைச் சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது அரசாங்கம் ஃபிட்மென்ட் காரணியை 3.68 மடங்கு உயர்த்தினால் ரூ.26,000 சம்பளம் பெறும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 95,680 ஆக இருக்கும். அதே போல 2.57 ஃபிட்மென்ட் காரணி உயர்வு ஏற்பட்டால் ரூ.18,000 பெறும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.46,260 ஆக உயரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!