தமிழக அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களின் கவனத்திற்கு - மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு!
தமிழக அரசு ஊழியர்களின் கவனத்திற்கு - மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு!
தமிழக அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) 2021ல், கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிக்சையையும் சேர்க்க வேண்டும் என்று எழுபட்ட கோரிக்கைகளுக்கு மத்தியில் இது தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை

பொதுவாக அரசுத்துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள், அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு சிறப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை – முதல்வர் உத்தரவு!

இப்படி இருக்க அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உயர் சிகிச்சைப் பிரிவில் கொரோனாவுக்கான சிகிச்சைகளையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட தமிழக அரசு, கொரோனா சிகிச்சைகளை பொறுத்தவரை, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சத்தை விட கூடுதலான தொகை அரசு நிதியுதவியின் கீழ் அனுமதிக்கப்படும் என்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நலன் கருதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, ‘யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முன்மொழிவை ஆய்வு செய்த அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் படி, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021ன் கீழ் தலா ரூ.1 கோடி மட்டுமே பணியாளர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2018ன் புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!

மேலும் குறிப்பிட்ட நோய் வகையின் கீழ் கொரோனா பாதிப்புகளை உள்ளடக்கி, காப்பீடு செய்வதற்கும், ரொக்கமில்லா அடிப்படையில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.7.50 லட்சம் வரை அதிகபட்ச உதவிகளை வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் தனித்தனி ஒப்பந்தங்களை செய்துள்ள வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றின் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த உத்தரவுகள் பொருந்தாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!