தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

0
தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் விடுமுறை நாட்களிலும் இலவச நீட் பயிற்சி – ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி வார இறுதி நாட்களிலும், தேர்தல் விடுப்பு நாட்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் தாமதம்:

நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையால் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

தமிழக பள்ளிகள் பராமரிப்பு நிதிக்கான அறிக்கை – மார்ச் மாதம் சமர்ப்பிக்க உத்தரவு!!

நீட் பயிற்சி:

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நீட் தேர்வில் கேள்விகள் அனைத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். இதனால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்படைய கூடாது என்ற நோக்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வாரம் தோறும் நடத்தப்படும்.

TN Job “FB  Group” Join Now

விடுமுறை நாட்கள்:

நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்களை வாரத்தில் ஆறு நாட்களும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் வழங்கப்டும் இலவச நீட் பயிற்சியையும் வார விடுமுறை நாட்கள் மற்றும் தேர்தல் விடுப்பு நாட்களில் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!