தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு - மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு - மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!

பள்ளிகளில் மாணவர்கள் எந்த ஒரு பணியிலும் ஈடுபடக்கூடாது என்பது அரசு உத்தரவு. இத்தகைய அரசின் உத்தரவை அனைத்து பள்ளிகளும் பின்பற்றுகிறதா என்று கண்காணிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை ஆணையம் உத்தரவு:

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, ஆசிரியர்களின் சொந்த வேலைகளில் உதவி புரிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு அனைத்து பள்ளிகளிலும் குற்றம் நடக்கிறதா என்று சரிபார்க்க மனித உரிமை ஆணையம் பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வி இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகளை கண்காணிக்கும் படி அறிவுறுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழக ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்? தகவல் வெளியீடு!

2015 ஆம் ஆண்டு தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பள்ளி பணிகளில் ஈடுபட சொல்லி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு பதிவானது. மதுரை திருமங்கலத்தில் உள்ள கீழ் உரப்பனூரில் ஆதிசிவன் என்பவரின் மகன் சிவநிதி. அவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரை வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசிரியர் சிவநிதிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிவநிதி அப்பணியை செய்யும் போது அவரது காலில் பெஞ்ச் விழுந்து காயம் ஏற்பட்டது.

பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

ஆசிரியர் வகுப்பறையை சுத்தம் செய்ய சொல்லி கூறியதால் தான் மாணவனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மனித உரிமை மீறல் என்ற அடிப்படையில் இப்புகாரை விசாரித்த ஆணையம் அப்பள்ளி நிறுவனத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாதது தான் காரணம் எனக் கூறி மாணவன் சிவநிதிக்கு 1 லட்சம் ரொக்கப்பணம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக பள்ளிகளை கண்காணிக்க மனித உரிமை ஆணையம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!