தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – மாணவர்களே உஷார்! மீறினால் நடவடிக்கை!

1
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு - மாணவர்களே உஷார்! மீறினால் நடவடிக்கை!
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு - மாணவர்களே உஷார்! மீறினால் நடவடிக்கை!
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு – மாணவர்களே உஷார்! மீறினால் நடவடிக்கை!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் நின்று கொண்டு அல்லது கூட்ட நெரிசலில் தொங்கி கொண்டு பயணிப்பது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

முக்கிய அறிவுரை:

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறித்து அத்துறையின் சார்பாக அவ்வப்போது சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் கீழ் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நடத்துனர்கள் மரியாதை இன்றி பேசுவதாக புகார்கள் எழுந்தது. இந்த புகார் போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அப்போது நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பேருந்தை அதன் நிறுத்தங்களில் சரியாக நிறுத்தி பயணிகளை ஏற்றி பேருந்தை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து தற்போது போக்குவரத்து கழகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பேருந்தில் மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்ட நெரிசலில் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்து வருகின்றனர்.

Housing Loan வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறைந்தது வட்டி விகிதம்! ஜாக்பாட் வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

சிலர் பேருந்தில் இடம் இருந்தாலும் இருக்கையில் அமராமல் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதனால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் நேரிடுகிறது. இது போன்று மாணவர்கள் பயணம் செய்ய கூடாது என்று போக்குவரத்து துறையு பல முறை அறிவுறுத்தியும், நடவடிக்கைகள் எடுத்தும் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் பேருந்தில் முறையற்று பயணித்தால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அவ்ரகளுக்கு அறிவுறுரை வழங்க வேண்டும். மீறினால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவரச எண்ணிற்கோ அழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. போங்கடா வீணாபோனங்கவளா.பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் தரக்கூடாது என்று சட்டம்.ஆனால் ஒரு மாதத்திலேயே காத்துல பறந்து போச்சு.இந்தசட்டம் எத்தனை நாளைக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!