ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவு!!
அரசு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், தனியார் துறைகளுக்கு சென்று உடனடியாக வேலை செய்யக்கூடாது என ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள்
அரசு துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெறும் அதிகாரிகள் உடனடியாக தனியார் துறைகளுக்கு சென்று வேலையில் சேரக்கூடாது என ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மத்திய அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அளித்துள்ள உத்தரவின் பேரில், ‘ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு அரசு துறை ஊழியர்களும், தனியார் துறைகளுக்கு சென்று வேலை செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படும். இந்த கால இடைவெளியை பின்பற்றாமல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உடனடியாகவே தனியார் துறைகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் – தொடக்க கல்வி இயக்குனர்!!
இது நடத்தை குறைவான செயல் ஆகும். இந்த வகையில் தனியார் துறைகளில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எவ்வித ஊழல் வழக்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.