தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் – தொடக்க கல்வி இயக்குனர்!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் - தொடக்க கல்வி இயக்குனர்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் - தொடக்க கல்வி இயக்குனர்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் – தொடக்க கல்வி இயக்குனர்!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து பள்ளிகள் திறந்ததும் அறிவிக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்கள் விநியோகம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் மூலம் அந்தந்த வகுப்புகளுக்கு உரிய புத்தகங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் இணையம் மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். கடந்த வருடம் ஜூன் 1 க்கு முன்னரே, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த வருடமும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த மே 31ம் தேதியுடன் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. ஆனால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஆசிரியர்களும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளனர். அதனால், பள்ளிகள் திறப்பு, புத்தகங்கள் வழங்குவது மற்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து, இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழக பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும், அனைத்து அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளும் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பேடிஎம் (Paytm) பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பணமோசடி!!

இது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அறிக்கை அனுப்ப வேண்டும். மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து, பள்ளிகள் திறந்ததும் அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!