தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை செய்யலேனா பணம் கிடையாது! அரசின் உத்தரவு!

0
தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை செய்யலேனா பணம் கிடையாது! அரசின் உத்தரவு!
தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை செய்யலேனா பணம் கிடையாது! அரசின் உத்தரவு!
தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை செய்யலேனா பணம் கிடையாது! அரசின் உத்தரவு!

தமிழகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பாக ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செய்யாவிட்டால் ஓய்வூதியத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்து விடும்.

ஆயுள் சான்றிதழ்:

தமிழக அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு உதவும் வகையில் அரசு சார்பாக மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை அவர்களது வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். இது ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் சான்றாகும். ஓய்வூதியதாரர்கள் முதலில் நேரடியாக அலுவலகத்தில் சென்று சமர்ப்பித்து வந்தனர்.

ஆனால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் வெளியில் வருவதில் பல்வேறு இடர்களை சந்தித்தனர். எப்போதும் நவம்பர் மாதம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க அரசு கால அவகாசத்தை நீட்டித்தது. மேலும் மாற்று முறையாக ஆன்லைன் வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி & மின்னலுடன் கூடிய மழை பொழியும் – வானிலை அலர்ட்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழக ஓய்வூதியதாரர்கள் 2022ம் ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்கள் நேரிலே அல்லது அஞ்சல் துறை வங்கியின் வாயிலாகவோ அரசின் இ-சேவை மற்றும் பொது சேவை மையங்கள் வாயிலாகவும் வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்கலாம். அத்துடன் ஜீவன் பிரமான் முகம் எனும் செயலியை பயன்படுத்தியும் ஓய்வூதிய சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு முகாம்கள் வாயிலாகவும் மின்னணு வாழ்நாள் சான்றிதழினை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!