முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21

0

முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 21

உலகத் தொலைக்காட்சி தினம்

  • உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாச்சாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கு இத்தினம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
  • ஐ.நா. சபையானது 1996ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நவம்பர் 21ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

உலக வணக்கம் நாள்

  • உலக வணக்க நாள் நவம்பர் 21 அன்று ஆண்டுதோறும் ஒரு மதச்சார்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்நாளின் குறிக்கோள்  குறைந்தபட்சம் பத்து பேருக்கு வணக்கம் சொல்ல வேண்டும். இது சமாதானத்தை பாதுகாப்பதற்கான தனிப்பட்ட தகவலின் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.
  • 1973ல் எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் காரணமாக உலக வணக்க நாள் தொடங்கப்பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள மக்கள் உலகளாவிய சமாதானத்திற்கான தங்கள் கவலையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக உலகளாவிய வணக்க தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உலக கடற்றொழிலாளர் தினம்

  • உலக கடற்றொழிலாளர் தினம் உலக மீன்பிடி முகாமைத்துவத்தால் (WWF) கடல்சார், மீன் பங்குகள், மீன்பிடி மற்றும் கடலோர சமூகங்களின் நிலையை பற்றி  அதிகரித்து வரும் அறிவைப் பிரதிபலிக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது.
  • நவம்பர் 21ம் நாளில்  உலக மீனவர்களுக்கும் உலகின் மீன் பிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக பேரணிகள், பொதுக் கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை நடத்தப்படுகிறது.

சர் சந்திரசேகர வெங்கட ராமன் நினைவு தினம்

பிறப்பு:

  • நவம்பர் 7, 1888ல்  திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.
By Nobel Foundation [Public domain, Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் ஆவார்.
  • இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
  • ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர்.
  • சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.
  • பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

விருதுகள்:

  • இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929ம் ஆண்டில் “நைட் ஹுட்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.
  • இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது.
  • மைசூர் அரசர் “ராஜ்சபாபூசன்” பட்டத்தை 1935ம் ஆண்டில் வழங்கினார்.
  • பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்க்ளின்” பதக்கம் 1941ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954ம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
  • 1957ம் ஆண்டில் அகில “உலக லெனின் பரிசு” அளிக்கப்பட்டது.

இறப்பு:

  • நவம்பர் 21, 1970ல் இறந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

  • 1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
  • 1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
  • 1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!