முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-02

1

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-02

இளையராஜா பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூன் 2, 1943ல் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார்.

இயற்பெயர்: ஞானதேசிகன்

Bollywood Hungama [CC BY 3.0 (https://creativecommons.org/licenses/by/3.0)], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர்.
  • இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
  • தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர்.
  • இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
  • இளையராஜா “பஞ்சமுகி” என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
  • லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993ம் ஆண்டு பெற்றார்.(அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

விருதுகள்:

  • இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்மபூசண் விருது 2010ம் ஆண்டு அளிக்கப்பட்டது.
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.
  • இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 25 ஜனவரி 2018ல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • 1988ம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
  • 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
  • இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும் 1996ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் – Degree of Doctor of Letter) பெற்றவர் இளையராஜா.

எழுதிய புத்தகங்கள்:

  • வழித்துணை
  • துளி கடல்
  • ஞான கங்கா
  • பால் நிலாப்பாதை
  • உண்மைக்குத் திரை ஏது?
  • யாருக்கு யார் எழுதுவது?
முக்கியமான நிகழ்வுகள்
  • 1896 – மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
By Jan Kameníček [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], from Wikimedia Commons

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!