முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-04

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-04

குல்சாரிலால் நந்தா பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூலை 4, 1898ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட்டில் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய அரசியல்வாதியும்,தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார்.
  • இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார்.
  • 1964ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும்,1966ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
  • இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார்.
  • இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

அரசியல் கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்

இறப்பு:

  • ஜனவரி 15, 1998ல் இறந்தார்.
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

பிறப்பு:

  • ஜனவரி 12, 1863ல் கல்கத்தாவில் பிறந்தார்.

இயற்பெயர்: நரேந்திரநாத் தத்தா

தாய் மொழி: வங்காளம்

By Thomas Harrison [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
  • இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
  • 1893ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
  • நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர்.
  • விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள்,எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
  • தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள்,சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.
  • இந்தியாவில், விவேகானந்தர் ஒரு தேசபக்தி துறவி என கருதப்படுகிறார் மற்றும் அவரது பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

  • உண்மைக்காக எதையும் துறக்கலாம் ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
  • இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
By Ramakrishna Mission Delhi (Ramakrishna Mission Delhi) [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html), CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/), Public domain or Public domain], via Wikimedia Commons

தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்:

  • விவேகானந்தர் நினைவு மண்டபம்
  • விவேகானந்த கேந்திரம்
  • விவேகானந்தர் இல்லம்
  • விவேகானந்தர் பாறை

இறப்பு:

  • ஜூலை 4,1902ல் இறந்தார்.
மேரி கியூரி நினைவு தினம்

பிறப்பு:

  • நவம்பர் 7, 1867ல்  போலந்தில் பிறந்தார்.
See page for author [Public domain, Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.
  • மேரி தான் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்ணாவார்.
  • இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903 & 1911ம் ஆண்டுகளில் பெற்றார்.(இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்)
  • ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலங்களைக் கண்டுபிடித்தார்.
  • பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரே ஆவார்.
  • கதிரியக்கம்(இது இவர் உருவாக்கிய சொல்)பற்றிய ஓர் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும் இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தார்.
  • இவரது வழிகாட்டுதலின் கீழ் உலகிலேயே முதன்முறையாக கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • 1895ல் ரோஎன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களை கண்டுபிடித்தார்.
  • 1898ல் தோரியமும் கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டார்.
  • 1896ல் பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார்.
  • பியரியும் அவரது சகோதரரும் எலேக்ட்ரோமீட்டர் என்னும் ஒரு கருவியை மேம்படுத்தியிருந்தனர். இது மின்சாரத்தை மிக நன்றாக கண்டறியும். இதனை பயன்படுத்தி யுரேனியக்கதிர்கள் சுற்றியுள்ள காற்றில் மின்சாரத்தை உண்டாக்குகின்றன என்று மேரி கண்டார்.
  • 26 டிசம்பர் 1898ல் இன்னொரு தனிமத்தை கண்டுபிடித்து அதற்கு ரேடியம் என பெயரிட்டனர். மேலும் radioactivity என்ற சொல்லை கதிரியக்கத்திற்கு பெயராக இட்டனர்.
By “Wide World Photos” and”Underwood and Underwood, New York” [Public domain or Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • ஜூலை 4, 1934ல் இறந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!