முக்கியமான நிகழ்வுகள் ஜூலை– 25

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை– 25

உலக கருவியல் தினம்

  • உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லுயி ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன் பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.
  • முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
  • எட்வர்ட்ஸ் என்பவர் சோதனைக்குழாய் குழந்தையின் தந்தை ஆவர்.
  • எட்வர்ட்ஸ் இதற்காக 2010 ம் ஆண்டு நோபல் பரிசை பெற்றார்.

செம்மங்குடி சீனிவாச ஐயர்

Related image

பிறப்பு:

  • மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.

சிறப்பு:

  • இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவரது இசைக் கச்சேரி 18 வயதில் கும்பகோணத்தில் அரங்கேறியது.
  • 1927-ல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார். இவரை அனைவரும் செம்மங்குடி மாமா என்று அழைத்தனர்.

விருதுகள்:

  • சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபுஷண், பத்மவிபுஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இறப்பு:

  • 92 வயதுவரை மேடைகளில் பாடிய சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 95வது வயதில் (2003) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

  • 2007 ம் ஆண்டில் பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!