முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 31

0

முக்கியமான நிகழ்வுகள் டிசம்பர் – 31

விஸ்வநாத தாஸ் நினைவு தினம் 

பிறப்பு:

  • விஸ்வநாத தாஸ் அவர்கள் தமிழநாட்டிலுள்ள சிவகாசியில் ஜூன்  16 ஆம் தேதி, 1886ல் பிறந்தார்.

செயல்கள்:

  • விஸ்வநாத தாஸ் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞரும் ஆவார்.
  • குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
  • ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.
  • அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன.
  • ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர்.
  • இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ்கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர்.
  • வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
  • கதர்கப்பல் தோணுதே‘, “கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள்.

சிறப்புகள்: 

  • தமிழ்நாடு அரசு தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் – நூலகம் அமைத்துள்ளது.
  • இங்கு தியாகி விஸ்வநாததாஸின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
  •  மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இறப்பு:

விஸ்வநாத தாஸ் அவர்கள் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

தமிழறிஞர் ச.வே சுப்ரமணியன் பிறந்த தினம்

பிறப்பு:

  • தமிழறிஞர் ச.வே சுப்ரமணியன் அவர்கள் தமிழநாட்டிலுள்ள திருநெல்வேலியில் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி, 1929ல் பிறந்தார்.

சிறப்புகள்: 

  • ச.வே சுப்ரமணியன் அவர்கள் தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.
  • திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
  • சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
  • இவர் எழுதிய தமிழ் நிகண்டுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.
  • தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் ஒன்று என 60 நூல்களை எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.
  • நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கினார்.

விருதுகள்:

  • இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார்.
  • தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி. ஆ. பெ. விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.
  • இவரது வாழ்க்கை வரலாறு “தமிழ் ஞாயிறு” என்னும் பெயரிலும், “சாதனைச்செம்மல்.ச.வே.சு” என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.

இறப்பு:

  • ச.வே சுப்ரமணியன் அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!