முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் 05

0
191

வரலாற்றில் இன்று

 • 1963 – ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
 • 1969 – மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.
 • 1979 – ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
 • 1989 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.
 • 2003 – இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
 • 2006 – வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

நீல்சு என்றிக்கு ஏபெல்

 • நீல்சு என்றிக்கு ஏபெல் (Niels Henrik Abel, ஆகத்து 5, 1802 – ஏப்ரல் 6, 1829) நோர்வீசிய கணிதவியலாளர் ஆவார். இவர் பல்வேறு துறைகளிலும் முன்னோடியாக பங்களித்துள்ளார்.
 • விகிதமுறா மூலங்களின் பொது ஐந்துபடிச்சமன்பாட்டிற்கு தீர்வு காண்பது இயலாதவொன்று என்பதற்கு முதன்முதலில் முழுமையான சான்றளித்தது இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக கருதப்படுகின்றது.
 • அவரது காலத்தில் இதுவே 250 ஆண்டுகளாக தீர்க்கப்படாத, முதன்மையான கணிதச் சிக்கலாகவும் இருந்து வந்தது.
 • நீள்வட்டச்சார்பு, ஏபெல் சார்புகளை கண்டறிந்தவர்.
 • இத்தகைய சாதனைகள் புரிந்திருந்தாலும் அவரது வாழ்நாளில் ஏபெல் அங்கீகாரம் எதனையும் பெறவில்லை.
 • மிகவும் வறியநிலையில் வாழ்ந்து கொண்டு தமது கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார். 26 அகவையிலேயே மறைந்தார்.

இறப்பு

சோய்செரோ ஹோண்டா

 • சோய்செரோ ஹோண்டா அல்லது சாய்க்கிரோ ஹோண்டா (Soichiro Honda) என்பவர் ஒரு சப்பானிய பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
 • 1948 இல், இவர் ஹோண்டா நிறுவனத்தை உருவாக்கி, அதன் வளர்ச்சியை மரக்குடிசை உற்பத்தியால் மிதிவண்டி இயந்திரம் முதல் பல்தேசிய தானூந்து, விசையூந்து வரை விரிவாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here