முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – ஏப்ரல் 2019

0

முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – ஏப்ரல் 2019

2019 நடப்பு நிகழ்வுகள்

இங்கு ஏப்ரல் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 2019
ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

நாள்

தினம்

முக்கிய நிகழ்வுகள்

ஏப்ரல் 5 தேசிய கடல் தினம்

100 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், 1919 ஆம் ஆண்டில், தி சிண்டியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிட்டட்டின் முதல் கப்பல், எஸ் எஸ் லாய்லிட்டி, ரஷ்ய சென்றது இது இந்தியாவின் கப்பல் வரலாற்றின் ஒரு முக்கியமான நாளாகும்.  ஏப்ரல் 5, 1964 அன்று முதல் தேசிய கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய கடல் தின விருதின் பெயர் வருணா விருது ஆகும்.

2019 கருப்பொருள்: “Indian Ocean-An Ocean of opportunity”

ஏப்ரல் 6

சர்வதேச விளையாட்டு அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான தினம்

ஏப்ரல் 6 ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் சபை விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்க்கான சர்வதேச தினமாக 2013ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இது 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டுவருகிறது.

ஏப்ரல் 7 உலக சுகாதார நாள்

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.  சுகாதார நடவடிக்கைகளை அறிந்து உடல்நலப் பிரச்சினையின்றி துல்லியமாக தங்கள் பணிகளை நிறைவேற்ற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

2019 கருப்பொருள்: Universal health coverage: everyone, everywhere

ஏப்ரல் 12 சர்வதேச தெரு குழந்தைகள் தினம்

தெரு குழந்தைகளுக்கான சர்வதேச தினம்: 12 ஏப்ரல் 2011 அன்று முதல் அனுசரிக்கப்பட்டுவருகிறது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கான தெருக் குழந்தைகளுக்கான உரிமைகளை புறக்கணிக்காமல் வழங்குவதே இந்த தினத்தின் நோக்கமாகும்

ஏப்ரல் 12

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்

ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் குடிமகனான யூரி ககாரின் முதல் மனித விண்வெளி பயணத்தை மேற்கொண்டர் அதை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏப்ரல் 7, 2011 இல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது அதில் ஏப்ரல் 12ஐ மனித விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.

ஏப்ரல் 17

உலக ஹீமோபிலியா தினம்

உலக ஹீமோபிலியா தினம், ஹீமோபிலியா மற்றும் பிற இரத்தப்போக்கு கோளாறுகளுக்கான சர்வதேச விழிப்புணர்வு தினமாகும். இது ஏப்ரல் 17 அன்று ஆண்டுதோறும் நடைபெறுகிறது, இது உலக ஹீமோபிலியா சம்மேளனத்தின் நிறுவனர் ஃபிராங்க் ஷாநபெலின் பிறந்த நாளன்று அனுசரிக்கப்படுகிறது .

2019 கரு “Reaching Out: The First Step to Care”.

ஏப்ரல் 18

உலக பாரம்பரிய தினம் நினைவு சின்னங்கள் மற்றும் தளங்கள் மீதான சர்வதேச கவுன்சில் (ICOMOS) 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஐ உலக பாரம்பரிய தினமாக அறிவித்தது. இதற்கு 1983 இல் யுனெஸ்கோவின் பொதுச் சபை ஒப்புதல் அளித்தது.

2019 கரு: Rural Landscapes

ஏப்ரல் 20

சீன மொழி தினம்

சீன மொழி தினத்திற்கான தேதி குயுவிலிருந்து (“ரெயின் ஆஃப் மில்லட்”) தேர்ந்தெடுக்கப்பட்டது, இது பாரம்பரிய கிழக்கு ஆசிய நாள்காட்டிகளில் 24 சூரிய காலத்தின் 6 வது இடமாகும். இது காங்க்ஜிக்கு அஞ்சலி செலுத்தும்படி அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழியாக சீன மொழி 1946ல் நிறுவப்பட்டது.

ஏப்ரல் 21

தேசிய குடிமை பணிகள் தினம்

ஒவ்வொரு ஏப்ரல் 21ம் தேதியும் இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அதிகாரிகளுக்கு சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. தனி நபர், குழு மற்றும் அமைப்பு என்ற அடிப்படையில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்திய குடிமைப் பணியின் தந்தை என அழைக்கப்படுபவர் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஆவார்.

ஏப்ரல் 22 உலக புவி தினம்

கலிபோர்னியாவின் கடற்கரையிலிருந்து 3500 க்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்ட 1969 சாண்டா பார்பரா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்த அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆதரவை நிரூபிக்க முதல் புவி தினத்தை உருவாக்கினார்.

 2019 தீம் – ‘Protect Our Species’.

ஏப்ரல் 23

ஆங்கில மொழி தினம்

ஐ.நா.வால் ஆங்கில மொழி தினம் ஏப்ரல் 23 அன்று பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது, இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் இறந்த மற்றும் பிறந்த தேதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது தகவல் துறையால் 2010 ஆம் ஆண்டில், ஐ.நா.சபையில் உள்ள 6 அலுவலக மொழிகளுக்கும் மொழி தினம் கொண்டாட வேண்டும் என்பதன் விளைவாக இந்த ஆங்கில மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால்(யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கொண்டாடும்  ஒரு நிகழ்வு ஆகும்

உலக புத்தக தலைநகரம் 2019: ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஏப்ரல் 24

உலக ஆய்வக விலங்குகள் தினம் 2019

உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ம் நாளை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தனர்.

ஏப்ரல் 25

உலக மலேரியா தினம் உலக மலேரியா தினம் மே 2007 இல் உலக சுகாதார சபையின் 60 வது அமர்வு மூலம் நிறுவப்பட்டது. இதன்பிறகு உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு உலக மலேரியா தினத்தை ஏற்று நடத்தும் நகரமாக பாரிஸ் தேர்வு செய்யப்படுள்ளது

2019 தீம் – “Zero malaria starts with me”.

ஏப்ரல் 26

உலக அறிவுசார் சொத்துரிமை தினம்

அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 26 இல் உருவாக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது

2019 கருப்பொருள்: Reach for Gold: IP and Sports.

ஏப்ரல் 28

வேலையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உலக தினம் வேலையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உலக தினம் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் ஒழுக்கமான வேலைகளை மேம்படுத்துவதற்கான ஆண்டு சர்வதேச பிரச்சாரமாகும். இது ஏப்ரல் 28 அன்று நடைபெறுகிறது மற்றும் 2003ல் இருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் 29 சர்வதேச நடன தினம்

1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாட்சார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபையால் [International Dance Council (CID)] இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜீன்-ஜார்ஜஸ் நோவெர்ர் (1727-1810) பிறந்த தினமான ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது.

2019 தீம் – Dance and Spirituality.

PDF Download

ஏப்ரல் 2019 முக்கியமான நாட்கள் & நிகழ்வுகள் Video –  கிளிக் செய்யவும் 

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூப்பில் சேரகிளிக்செய்யவும்

Telegram Channel ல் சேர கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!