முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 13, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 13, 2018

  • இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படையின் முதல் பெண் போர் அதிகாரியாக பிரகிரதி என்பவர் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜார்கண்டில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.
  • டெல்லியில் உள்ள ராஷ்திரபதி பவனில், சர்வதேச மகளிர் தினத்தில் மகளிரை கௌரவிக்கும் வகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங் டெல்லியின் தலைமை நீதிபதி கீதா மிட்டலுக்கு (உள்பட 30 பேருக்கு) நாரி சக்கி புரஸ்கார் விருது வழங்கினார். சட்டம் மற்றும் நீதித் துறையில் இவ்விருதை பெறும் முதல் பெண் இவரே.
  • மரபு சாரா மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 175GW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உலகின் மிகப் பெரிய திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
  • உலக குத்துச் சண்டை தரவரிசையில் இந்தியாவின் நவ்ஜோத் கௌர் முதல் முறையாக 2 வது இடத்து முன்னேறி உள்ளார்.
  • 2018 ம் ஆண்டிற்கான “ஐஸ்லாந்து கலாச்சார திருவிழா” (Ice Landic Cultural Festival) புதுச் சேரியில் தொடங்கியுள்ளது.
  • ஹரியானா மாநிலத்தின் முதல் இணையவழி காவல் நிலையம் (Cyber police Station) குருகிராமில் (Gurugram) தொடங்கப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவில்லாமல் சுற்றித் திரியும் பெண் மனநோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 பராமரிப்பு மையங்கள்; அமைக்கப்பட உள்ளன. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் (NHM) தமிழக அரசும் இணைந்து இந்த மையங்களை அமைக்கிறது.
  • மெக்சிகோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் ஆடவர் 50m Rifle 3 Positions பிரிவில் இந்தியாவின் “அகில் ரோஷன்” தங்கம் வென்றுள்ளார்.
  • ‘JUNIBER COPRA 2018’அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி ஆகும். இது இஸ்ரேல் நாட்டில் நடைபெற்றது.
  • மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உலகின் ஒரே மிதக்கும் ஏரியான “லோக் டாக் ஏரியின்” (Lok tak lake) நீர் தரத்தை உயர்த்தும் நோக்கில்ää உயிரி ஆதாரம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான ஆய்வக நிறுவனம் (BSD) மிதக்கும் ஆய்வகத்தை (Floating laboratory)அந்த ஏரில் தொடங்கியுள்ளது.
  • தைவானில், கிராம மக்கள் சற்று தொலைவில் உள்ள உறவினர்களுக்கு நாங்கள் நலமாக இருப்பதை உணர்த்தும் வகையில் வானில் விளக்குகள் பறக்கவிடும் விநோதமான “விளக்கு திருவிழா” நடைபெற்றது.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!