தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கான புதிய வழிமுறைகள் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கான புதிய வழிமுறைகள் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கான புதிய வழிமுறைகள் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கான புதிய வழிமுறைகள் – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. மேலும் நடவடிக்கைகள் நிறைவேற்றும் வகையில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்துகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின்பு போக்குவரத்து வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தால் பல ஏழை பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இதை தவிர விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் தேவைகளை அறிந்து உடனடியாக அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் சென்னை மாநகரத்தில் முதன் முறையாக பெண்களுக்கு என்று பிங்க் பேருந்து வசதி திட்டம் அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அரசு பேருந்துகளில் புதிய நடவடிக்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக முறைத்து பார்ப்பது, கண் சிமிட்டுவது, கேலி கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை உடனே பஸ் கண்டக்டர்கள் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடலாம் அல்லது காவல் துறையினரிடம் ஒப்படைத்து விடலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் பொது போக்குவரத்தில் மோட்டார் வாகனங்களுக்கு சில புதிய வரைவு திருத்தங்களை வெளியிட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், பெண்களிடம் பாலியல் ரீதியாக புண்படுத்தக் கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரிப்பது, புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றை செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் நடத்துனர்கள் பெண்களிடம் பயணத்தை குறித்து அல்லாமல் வேறு எந்த அநாகரிகமான கேள்விகளை கேட்க கூடாது என்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக நடக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் நடத்துநர்களின் பணி குறித்து தெரிவிக்கும் வகையில் வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும் எனவும் காவல் அதிகாரிகள் கேட்கும் போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் நடத்துனர் இல்லாத நிலையில் ஓட்டுனர்கள் கவனித்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!