இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் தனியார்மயம்!

1
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விரைவில் தனியார்மயம்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விரைவில் தனியார்மயம்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் தனியார்மயம்!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தில் இரண்டு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை தொடர்ந்து அதில் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என தெரிய வந்துள்ளது.

வங்கிகள் தனியார்மயமாக்கல்:

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திட்டச் செலவுக்கான நிதியில் பாதித்தொகை வெளியில் இருந்து பெறப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தவிர, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனில் சில சதவிகித பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை – கொரோனா பரவல் எதிரொலி!

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பின் படி, இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று என தகவல் வெளிவந்துள்ளது.

2021-22-ம் ஆண்டில் இரண்டு வங்கிகள் மட்டும் தனியார்மயமாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியார்மயமாக்க பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிற வங்கிகளை ஒப்பிடுகையில், ஐஓபி வங்கியில், பிற கிளைகளுக்குப் பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஐஓபி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும், சேவைக் கட்டணம் இல்லாமல், பணம் எடுக்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே இந்த வங்கியை 2005 ஆம் ஆண்டு வடமாநில வங்கியுடன் இணைக்கத் திட்டமிட்டபோது, எதிர்ப்பினால் அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கணக்குகள் ஐஓபி வங்கியில் உள்ளன. எனவே தனியார்மயமாக்கல் முடிவை கைவிட வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களே ? IOB வங்கியை விட்டுவிட்டு நீங்கள் மற்ற எந்த அரசு வங்கிகளை வேண்டுமானாலும் தனியாருக்கு அள்ளி கொடுங்க கிள்ளி கொடுங்க கேட்க தமிழர்கள் வரமாட்டார்கள்.ஆனால் IOB தமிழ்நாட்டின் தலைமை இடம்,தமிழ்நாட்டு சொத்து புரிந்துக்கொள்ளுங்கள்.மீண்டும் சொல்லுவோம் தமிழ்நாடு என்ன கதவு இல்லாத வீடா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!