இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை – கொரோனா பரவல் எதிரொலி!

0
இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை - கொரோனா பரவல் எதிரொலி!
இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை - கொரோனா பரவல் எதிரொலி!
இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை – கொரோனா பரவல் எதிரொலி!

கொரோனா நோய்பரவல் இரண்டாம் அலை தீவிரம் காரணமாக நடப்பாண்டில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வது ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதை அடுத்து அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம்:

இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்வர். ஹஜ் என்பது சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஓர் புனித நகரமான மக்காவில் உள்ள காபாவுக்கு மேற்கொள்ளப்படும் புனித யாத்திரையாகும். இந்நிலையில் நடப்பாண்டில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் – பணி நீட்டிப்பு வழங்க ஆணை!

மேலும் கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு 60 ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க சவுதி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணம் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சவுதி அரேபிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டுமே ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

TN Job “FB  Group” Join Now

நடப்பாண்டில் வெளிநாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து நடப்பாண்டில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வது ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும் ஹஜ் பயணத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் கமிட்டி தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!