SBI, Canara, PNB வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை – இதனை செய்யவே செய்யாதீர்கள்!!

0
SBI, Canara, PNB வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை - இதனை செய்யவே செய்யாதீர்கள்!!
SBI, Canara, PNB வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை - இதனை செய்யவே செய்யாதீர்கள்!!
SBI, Canara, PNB வங்கி வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை – இதனை செய்யவே செய்யாதீர்கள்!!

தற்போது PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான முறைகளில் மோசடிகள் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் SBI, Canara, PNB உள்ளிட்ட வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

தற்போதைய கால கட்டத்தில் அனைத்து பயன்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் முறையில் பணபரிவர்த்தனை மேற்கொள்ள PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட பல்வேறு வகையான ஆன்லைன் செயலிகள் பயன்படுகிறது. இதனால் சில மோசடிக்காரர்களால் உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்பட்டு விடும் அபாயம் உள்ளது. மேலும் ஆன்லைன் முறையில் மோசடிகளை நிகழ்த்த மோசடி நிகழ்த்துபவர்கள் தினமும் புதுப்புது உக்திகளை கையாண்டு வருகின்றனர். அதனால் ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உங்கள் மொபைலில் வைரஸ்களை அனுமதிக்காத வண்ணம் பாதுகாப்பான செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்துகிறது. மேலும் தற்போது ஆண்டிராய்டு இயங்குதளங்களில் சோவா என்ற வைரஸ் போலியான வங்கி செயலிகளை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் உங்களின் மொபைலில் இருக்கும் அனைத்து தனிப்பட்ட விவரங்களும் திருடப்பட்டு விடும்.

சொந்த ஊர் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அத்துடன் நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள ஒவ்வொரு செயலியில் இருக்கும் தகவல்களும் திருடப்படும். மேலும் இந்த போலியான வங்கி செயலியை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் உங்களின் தகவல்கள் HACKER-களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதே போல் செல்போன் Display-யில் என்னென்ன உள்ளன என்பதை Screenshot கூட எடுக்க முடியும். இதையடுத்து செல்போனில் இருக்கும் கேமராவை பயன்படுத்தி வீடியோ எடுக்கவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை நீங்கள் பதிவிறக்கம் செய்து விட்டால் அதனை நீக்குவது கடினமாகும் எனவும் எச்சரித்துள்ளது. அதனால் போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!