IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

இந்திய தொழில்துறை நிதிக் கழகத்தில் (IFCI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director (Legal), Senior Associate (Estates) பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய தொழில்துறை நிதிக் கழகம் (IFCI)
பணியின் பெயர் Director (Legal), Senior Associate (Estates)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

IFCI காலிப்பணியிடங்கள்:

IFCI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Director (Legal) – 01 பணியிடம்
  • Senior Associate (Estates) – 01 பணியிடம்

IFCI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Director (Legal) – LLB, LLM
  • Senior Associate (Estates) – BE / B.Tech (Civil)

IFCI வயது வரம்பு:

31.01.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Director (Legal) – அதிகபட்சம் 65 வயது
  • Senior Associate (Estates) – அதிகபட்சம் 35 வயது

IFCI ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் IFCI நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

IFCI தேர்வு முறை:

இந்த IFCI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFCI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது (Resume / Biodata) விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.02.2024) அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!